சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) கால்களில் விழுந்துள்ள ரணில், அவர்கள் சொல்வதைக் கேட்டு பல காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது சட்ட வல்லுனர்கள் மற்றும் அமைச்சர்கள் இணைந்து ஒரு சட்டத்தை அமுலாக்க ரூம் போட்டு ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அது என்னவென்றால் வீட்டுக்கு வீடு வரி அறவிடுவது என்பது தான் . 3 கோடி ரூபா பெறுமதியான வீட்டில் இருந்தால் அதற்கு ஒரு வரி, 50 லட்சம் பெறுமதியான வீட்டில் இருந்தால் அதற்கு ஒரு வரி. இப்படி வரி என்ற போர்வையில் மக்களை ஒட்டு மொத்தமாக மொட்டை அடிக்க ரணில் திட்டம் போட்டு வருகிறார்.
ஐரோப்பிய மற்றும் மேற்கு உலக நாடுகளில், Recession என்று சொல்லப்படும் பண வீக்கம் ஏற்பட்டால். உடனே அன் நாடுகள் வட்டி விகிதத்தை அதிகரிக்கும். அத்தோடு மேலதிக வரிகளை மக்கள் தலையில் சுமத்தி. பண வீக்கத்தை கட்டுப்படுத்துவார்கள். ஏன் என்றால் மேற்கு உலக நாடுகளில், பெரும்பாலும் தனி நபர் வருமானம் என்பது மிக அதிகமாக இருக்கும். ஆனால் இலங்கை போன்ற பஞ்சப்பட்ட நாடுகளில் தனி ஒருவரின் வருமானம் என்பது மிக மிகக் குறைவு ஆகும். அப்படியான ஒரு நிலையில் எப்படி மேலும் மேலும் வரிகளை அதிகரிக்க முடியும் ?
ஏற்கனவே வேலை செய்பவர்கள் சம்பளத்தில் இருந்து சுமார் 20 தொடக்கம் 21% விகிதத்தை அரசு வரியாக எடுத்து வருகிறது. VAT டாக்ஸ் போட்டுள்ளது. அது போக ஆடம்பர வரி, அது இது என்று பல வரிகளை போட்டுள்ளது. தற்போது போதாக் குறைக்கு வீட்டு வரி வேறு வர உள்ளது என்பது. சொந்த வீட்டில் இருந்துகொண்டு வாடகை கட்டுவது போல ஆகிவிடுகிறது. அதாவது இலங்கையில் உற்பத்தியை பெருக்காமல் வரிகளை போட்டு இலகுவாக மக்களிடம் இருந்து பணத்தை பிடுங்க அரசு முனைகிறது., அரிசி, ரப்பர், தெயிலை, கராம்பு, கறுவா , ரத்தினக் கல் என்று ஏகப்பட்ட பொருட்கள் இலங்கையில் உள்ளது. இதனை ஏற்றுமதி செய்தாலே போதும். பெரும் தொகைப் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
ஆனால் இப்படி பல வழிகள் இருக்கும் போது சர்வதேச நாணய நிதியம்(IMF) சொல்லும் இந்த வரிகளை மக்கள் மீது எவ்வாறு சுமத்த முடியும் ? மேற்கு உலக நாடுகளில் இது சாத்தியம். ஆனால் இலங்கையில் இது சாத்தியமாகுமா ? இன்னும் ரணிலை நம்பிக் கொண்டு இருக்கும் மக்கள், இது தொடர்பாக விழிப்பாக இருப்பது நல்லது. மக்களிடம் வரி போட்டு திறைசேரியை நிரப்புவது என்பது, ஒரு தற்காலிக தீர்வு…இதில் எந்த ஒரு பயனும் இல்லை. மேலும் மேலும் மக்களை ஏழைகளாக்கவே இது ஏதுவாக அமையும்.