பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகராகவும் நடிப்பு ஜாம்பவானாகவும் 70களில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் பாலிவுட் திரை உலகை ஸ்டாரான அமிதாப் பச்சன்.இவரது நடிப்பு ஒவ்வொரு படத்திற்கும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வெகு சீக்கிரத்திலேயே புகழின் உச்சத்தை அடைந்தார்.
தொடர்ந்து அவர் அசைக்க முடியாத இடத்தில் பாலிவுட் சினிமாவில் தனது மார்க்கெட்டை நிலைநாட்டிக் கொண்டார். பாலிவுட்டில் அடுத்த அடுத்த வெற்றி படங்களில் நடித்த அமிதாப்பச்சன் சூப்பர் ஹீரோவாக அங்குள்ள மக்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார் என்று சொல்லலாம்.
இவர குறிப்பாக 70ஸ் காலகட்டங்களில் கோபக்கார இளைஞன் என பெயர் பெற்று பிரபலமடைந்தார். தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த பச்சன் குடும்பம் மிகப்பெரிய நட்சத்திர குடும்பமாக பாலிவுட் சினிமாவில் தங்களது ஆணித்தரமான வெற்றியை பதிவு செய்து தொடர்ந்து இவர் பல மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது தமிழிலும் நடித்து வருகிறார். அதாவது நடிகர் அமிதாபச்சன் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடித்த வருகிறார். தற்போது 81 வயதாகும் அவர் தொடர்ந்து சினிமாவில் இன்னும் அதே ஆக்டிவோடு நடித்து வருவது தான்பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் தற்போது அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இன்று காலை அமிதாப்பச்சன் திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆக இருக்கிறார் என்றும் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மும்பையில் இருக்கும் தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் அங்கு அவருக்கு angioplasty சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளிவரும் செய்திகள் கூறுகிறது.
இதனால் அமிதாப்பச்சனின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி…. அவருக்கு என்ன எனது? என பலரும் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டி வருகிறார்கள். தற்போது இந்த செய்தி பாலிவுட் சினிமாவின் தலைப்பு செய்தியாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.