பாரினில் இருந்தே பக்கா ஸ்கெட்ச்.. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கொலை..

பாரினில் இருந்தே பக்கா ஸ்கெட்ச்.. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கொலை..

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மேலவன்னியூர் பகுதியை சேர்ந்தவர் மாமல்லன்(45). தண்ணீர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவருடன் நாகலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்கள் கள்ளக்காதல் 3 ஆண்டுகளாக நீடித்து வந்தது.

இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் கணவர் மாமல்லனுக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனையடுத்து குடும்பத்துடன் சிதம்பரம் பகுதிக்கு குடியேறினர். இதனிடையே கள்ளக்காதலன் தங்க பாண்டியன் வெளிநாட்டு வேலைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து நாகலட்சுமிக்கு வீடியோ கால் மூலம் தினமும் பேசி வந்துள்ளார். மீண்டும் இவர்களது பழக்கம் தொடர்வதை அறிந்த மாமல்லன் மனைவியை எச்சரித்துள்ளார். இதனால் நாகலட்சுமி கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி மாமல்லன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாமல்லன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தனது தம்பியின் சாவில் மர்மம் இருப்பதாக மாமல்லனின் அண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மனைவி நாகலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று தங்கள் பாணியில் விசாரணை நடத்தி போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய வேண்டும் என தங்கபாண்டியனிடம் நாகலட்சுமி கூறியுள்ளார். இதனையடுத்த தங்கபாண்டியன் தனது நண்பர்களான சட்டக்கல்லூரி மாணவர் ராஜகுரு, மெக்கானிக் இளவேந்தன் ஆகியோருடன் சேர்ந்து இரும்பு ராடால் மாமல்லனை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, நாகலட்சுமி, ராஜகுரு, இளவேந்தன் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர் வெளிநாட்டில் பணிபுரியும் முதல் குற்றவாளியான தங்கபாண்டியனை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.