தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்த இன்று வரை சூப்பர் ஸ்டார் ஆக நிகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரை தாண்டி ஒரு இளம் நடிகர் அவர் இடத்தில் வரவே முடியாது என்ற அளவுக்கு ஆணித்தரமாக தனது வெற்றியும் தனது மார்க்கெட்டையும் பிடித்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
கடைசியாக லால் சலாம் திரைப்படத்தில் தனது மகள் இயக்கத்தில் நடித்திருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதை அடுத்ததாக தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் படு பிஸியாக சூட்டிங் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனுடையே அண்மையில் அம்பானி வீட்டு கல்யாணத்தில் கூட கலந்து கொண்டு சர்ச்சையில் சிக்கினார்.
அதாவது, தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை வேலைக்கார பெண்ணை அவமதித்து நடந்து கொண்ட வீடியோ பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. இதனால் ரஜினி மீதான ஒரு தவறான பிம்பம் இருந்தது. இதை அடுத்து தற்போது சொல்லப்படும் தகவல் என்னென்றால் ஒரு அதிர்ச்சியான தகவல் சிக்கி உள்ளது. அதாவது, நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1978 ஆம் ஆண்டு படப்பிடிப்புக்காக ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார். அங்கு வேலை முடிந்தவுடன் ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பிய ரஜினி…
அப்போது ஹைதராபாத் விமான நிலையத்தில் அளவுக்கு அதிகமான மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடி கொண்டு சென்றுள்ளார். ரஜினி அந்த சமயத்தில் தன் நண்பரிடம் தகாத வார்த்தையால் பேசி அங்கேயே அசிங்கப்படுத்தி அவரை சண்டை இழுத்துள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே சண்டை வெடித்து விட்டது. அந்த நேரத்தில் விமான நிலைய அதிகாரிகள் ஓடி வந்து அவரை சமாதானப்படுத்த முயற்சித்தார்களாம்.
ஆனால், ரஜினி அவர்களையும் மோசமாக திட்டி தகாத வார்த்தைகள் திட்டி சண்டை போட்டுள்ளார். உடனே விமானநிலைய அதிகாரிகள் ரஜினியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணாடிய அறையில் கூட்டிக்கொண்டு தங்க வைத்திருக்கிறார்கள். ஆனால், ரஜினி அதையும் மீறி ஓவர் போதையில் கண்ணாடியை உடைத்து விட்டு அட்டகாசம் செய்துள்ளார்.
கடைசியில் ஹைதராபாத் போலீசில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் செய்தித்தாளாகவே பகிரப்பட்டு வைரலாக வருகிறது. ரஜினி இந்த மோசமான முகம் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. தற்போது ரஜினி அடுத்த அடுத்து தொடர்ந்து இப்படி விமர்சிக்கப்படுவதால் அவர் மீதான ரசிகர்களின் பிம்பம் தவறாகப் பாய்ந்துள்ளது.