இந்திய சினிமாவில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இவர் முதன் முதலில் பாலிவுட் திரைப்படங்களில் ஆரம்பித்து அதன் பின்னர் மற்ற மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் பழனி திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அடி எடுத்த வைத்தார்.
முதல் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் அந்த படம் தோல்வியை தழுவியது. அதை அடுத்து அவர் தெலுங்கு மொழிகளில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். தெலுங்கில் மகதீரா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் அவருக்கு மார்க்கெட் அதிகரித்தது.இதனால் அதற்கு டோலிவுட்டில் முன்னாடி நடிகை என்ற இடத்தை பிடித்தார்.
தொடர்ந்து தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தனுஷ், விஜய், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களிடம் ஜோடி போட்டு நடித்ததால் காஜல் அகர்வால் டாப் ஹீரோயின் என்ற இடத்தை தக்க வைத்துக்கொண்டார் இதனிடையே காஜல் அகர்வால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக்கொண்டு மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தபோதே கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கௌதம் கிச்சிலி என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் கொரோனா காலகட்டத்தில் நடைபெற்றதால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்த தம்பதிக்கு நீல் என்ற மகன் இருக்கிறான். அவ்வப்போது மகனுடன் அவுட்டிங் செல்லும் சில கியூட்டான போட்டோக்கள் மற்றும் புகைப்படங்களை காஜல் அகர்வால் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
ஒரு முக்கிய ரோலில் ஹீரோயின் தோற்றத்தில் மிகவும் சவாலான கேரக்டர் ஏற்ற நடித்துள்ளார் காத்திருக்கும் நடிகை காஜல் அகர்வால் குறித்து தற்போது ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, காஜல் அகர்வால் ஹைதராபாத்தில் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் காஜல் அகர்வாலின் இடுப்பை பிடித்து செல்பி எடுக்க முயற்சிப்பார். இதை பார்த்ததும் கடுப்பான காசில் அகர்வால் என்ன இது எனக்கே உடனே அங்கிருந்து அவர்கள் அந்த இளைஞரை விரட்டிப் பிடித்து அப்புறப்படுத்தினார்.
முகம் சுளிக்க வைக்கும் இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக நடிகைகளுக்கு பொதுவெளியில் இப்படித்தான் நடக்கிறது என பொதுமக்கள் பலரும் காஜல் அகர்வாலுக்கு ஆதரவாக பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகைகள் என்றால் எப்படி வேண்டுமானாலும் அத்துமீறலாமா/ எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இல்லையா? என ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.