நடிகர் அஜித் குமார், திரிஷா நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிளாக சவாதீகா பாடல் யூடியூப்பில் வெளியாகி உள்ளது. இந்த சவாதீகா பாடல் யூடியூப்பில் நினைத்த அளவு ட்ரென் ஆகவில்லை. அது போக மிகக் கடுமையான விமர்சனங்களை இந்தப் பாடல் மேல் சுமத்தப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் விடாமுயற்சி பாடலை கடுமையாக நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள். இந்த பாடல் மியூசிக் காப்பி அடிக்கப்பட்டதாக கூறி அனிருத்தை விமர்சிக்கிறார்கள்.
பாட்டே இவ்வளவு கேவலாமாக இருக்கிறதே படம் எப்படி இருக்கும் என்று, பலர் கிண்டலடித்தும் வருகிறார்கள். மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’ இது பெரும் சிக்கல்களுக்கு மத்தியில் பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐரோப்பாவில் உள்ள அசர்பைஜான் நாட்டில் நடந்தது. மீதமுள்ள காட்சிகள் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராமேஜி பிலிம்சிட்டியில் நடந்தது. விடாமுயற்சி திரைப்படம் வெளியாக வெறும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படத்தின் புதிய அப்டேட் ஆக டீசர் வெளியிடப்பட்டது. அதன்பிறகு’சவாதீகா’ பாடல் வெளியாகியுள்ளது.