பிரிட்டிஷ் Passportக்கே மதிப்பில்லையா ? இந்த பாழா போன BR EXIT வந்த வினையை பார்த்தீர்களா ?

பிரிட்டிஷ் Passportக்கே மதிப்பில்லையா ? இந்த பாழா போன BR EXIT வந்த வினையை பார்த்தீர்களா ?

பிரித்தானிய பாஸ்போட் வைத்திருக்கும் பலர், தற்போது ஐரோப்பிய நாடுகள் செல்லும் போது பெரும் சிக்கலில் மாட்டி வருவது சகஜமாகி விட்டது. எல்லாம் இந்த பாழாப் போன BR எக்ஸிட்டால் வந்த வினை, என்று மக்கள் புலம்பும் அளவிற்கு நிலமை மோசமாகி விட்டது. ஜனவரி மாதம் 2020ல், பிரித்தானியாவில் நடைபெற்ற வாக்கெடுப்பில், 51 சத விகிதமானவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிய வேண்டும் என்று வாக்களித்தார்கள். வெறும் 1 சத விகிதத்தால் இது நிறைவேற. பிரித்தானியா பிரிந்தது. இதனையே BR EXIT என்றார்கள்.

நையில்-பராஃக் போன்ற சில அசிங்கமான அரசியல்வாதிகள், செய்த பிரச்சாரங்களை நம்பி வாக்குப் போட்ட ஆங்கிலேய மக்கள். இன்று தாம் விட்ட பெரும் பிழையை எண்ணி, வயிற்றில் அடித்துக் கொள்கிறார்கள். சமீபத்தில் வில்சன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் தலா, £1500 பவுண்டுகளை கட்டி, பிரிட்டனில் துறை முகத்தில் இருந்து, பிரான்ஸ் மற்றும் போத்துக்கல் நாடுகள் செல்ல இருந்தார்கள். ஆனால் அவர்களை, கப்பலில் ஏற அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. காரணம் அவர்கள் பிரித்தானியாவின் சிவப்பு நிற பாஸ்போட்டை வைத்திருப்பதாகவும். அது பிரித்தானியா ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து பிரிய முன்னர் வழங்கப்பட்ட பாஸ்போட் என்றும். கறுப்பு நிற பிரித்தானிய பாஸ்போட் இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும் என்று அதிகாரிகள் கூறிவிட்டார்கள்.

பிரித்தானியா என்ற நாடு ஐரோப்பிய நாடுகளின் ஒரு அங்கம். ஐரோப்பிய நாடுகளில் எந்த ஒரு நாட்டு பாஸ்போட் வைத்திருந்தாலும், ஐரோப்பாவில் எந்த ஒரு நாட்டுக்கும் விசா இல்லாமல் செல்ல முடியும். அது பிரித்தானிய இணைந்திருந்தாலும் சரி , இணையா விட்டாலும் சரி. ஆனால் பிரான்ஸ், நோர்வே போன்ற சில நாடுகள், இன்றுவரை பிரித்தானியர்கள் தமது நாட்டுக்குள் வர , கறுப்பி நிற பாஸ்போட்டை வைத்திருக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். அப்படி ஒரு சட்டம் என்பதே இல்லை ! இது சில குடிவரவு அதிகாரிகளால் கொண்டு வரப்பட்டுள்ள எழுதப்படாத சட்டம் !

ஆனால் பிரித்தானியா இது போன்ற ஈனத் தனமான செயலில் ஈடுபடவில்லை. எந்த ஒரு ஐரோப்பிய நாட்டவரையும், பிரித்தானியா இதுவரை தடுத்து நிறுத்தியதே இல்லை. ஐரோப்பிய பாஸ்போட் இருந்தால், பிரிட்டன் வருவதில் எந்த ஒரு தடையும் இல்லை. ஆனால் சில நாடுகள், பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து பிரிந்து சென்ற கடுப்பில் இதனை செய்து வருவது மிகவும் கண்டிக்கத் தக்க விடையம் ஆகும்.

ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் பிரிந்ததால், அன்று முதல் பால், உருளைக் கிழங்கு, போன்ற பல பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. காரணம் இவை யாவும் ஜேர்மனியில் இருந்து தான் பிரித்தானியா வருகிறது. அதற்கு அவர்கள் தற்போது வரி விதித்துள்ளார்கள். ஏற்கனவே பிரித்தானியா திண்டாடி தெருப் பொறுக்கி வரும் நிலையில், உலகத்தையே கட்டி ஆண்ட பிரித்தானிய பாஸ்போட் வைத்திருக்கும் நபர்களை, ஏதோ கிரிமினல் போல, பார்கிறது ஐரோப்பிய நாடுகள். இது கொஞ்சம் கூட நல்லா இல்லை என்கிறார் வில்ஸன் என்னும் இந்த நபர் !