ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த வேளை, இது 3ம் உலகப் போராக மாறிவிடும் என்று அச்சம் கொண்ட, பல ரஷ்யர்கள், இலங்கை வந்து சுற்றுலா விசாவில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக தங்கி வருகிறார்கள். இன் நிலையில் இவர்கள் எண்ணிக்கை 40,000 ஆயிரத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது.
இந்த ரஷ்யர்கள் பெரும் போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே இலங்கையில் ஐஸ்- ஹெரோயின், கொகெயின், கஞ்சா என்று பல போதைப் பொருள் பாவனையில் இருக்கும் நிலையில். இந்த ரஷ்யர்கள் வரவின் பின்னர், “குஷ்” என்ற போதைப் பொருள் பாவனை இலங்கையில் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் இதனைக் கட்டுப்படுத்த அனுராவின் அரசு, பெரும் பாடு பட்டு வரும் நிலையில். நேற்று முன் தினம் தினம்(23) கொழும்பு கட்ட நாயக்க விமான நிலையத்தில் பொலிசார் ஒரு ரஷ்ய இளைஞரை சுற்றிவளைத்தார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. மாலை இடம்பெற்ற இந்தக் கைதில், 34 வயதுடைய ரஷ்ய நபர் ஒருவர் கைதாகியுள்ள நிலையில். அவரிடம் இருந்து சுபார் 2KG குஷ் எனப்படும், போதைப் பொருள், கைப்பற்றப்பட்டுள்ளது என மேலும் அறியப்படுகிறது.