இலங்கையில் பல ஆண்டுகளாக பாதாள உலகக் குழுக்கள் இயங்கி வருகிறது. இவற்றில் பல அரச ஆதரவுடன் இயங்கி வருவதால், பொலிஸ் மற்றும் ராணுவத்தின் தலையீடு எதுவும் இருப்பதே இல்லை. மேலும் சொல்லப் போனால், இந்த பாதாள உலக குழுக்களை வைத்தே, பல வெள்ளை வேன் கடத்தல், தமிழர்களை கொலை செய்வது, கப்பம் கேட்ப்பது போன்ற செயல்களை, மகிந்த மற்றும் கோட்டபாயவின் அரசு மேற்கொண்டு வந்தது.
இன் நிலையில் அனுரா அரசு இதற்கு ஆப்பு வைத்துள்ளது. கடந்த சில மாதங்களில் கம்பஹா மற்றும் வேறு இடங்களில் பாதாள குழு தலைவர்கள் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இவர்களை கைது செய்ய பொலிசார் செல்லவில்லை. மாறாக என்கவுண்டர் செய்யவே சென்றார்கள். இது போலவே தற்போது இந்த பாதாள குழு தலைவர்களை பிடித்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக, அவர்களை என்கவுண்டர் செய்ய கடும் உத்தரவு பொலிசாருக்கு சென்றுள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் தகவல் தெரிவிக்கிறது.
இதனை அடுத்து இந்த பாதாளக் குழுவினர் பலர் நாட்டை விட்டு தப்பிச் சென்று வருவதோடு. மேலும் பலர் மறைந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் எவராவது அப்புரூவராக மாறினால், கோட்டபாய மற்றும் மகிந்த மீது சட்டம் பாயும் வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் அனுரா அரசு இதுவரை, கோட்டபாய மற்றும் மகிந்த ஆகியோர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் அப்படி ஏதாவது நடவடிக்கை எடுத்தால், அது அவர்களை மீண்டும் பிரபல்யமாக்க உதவி விடும்.