நாஸ்டர்டாமஸ் தந்த வார்னிங்.. அப்படியே நடக்குதே.. 2025 தொடங்கும் முன்பே.. திடீரென பரவும் மர்ம நோய்!

நாஸ்டர்டாமஸ் தந்த வார்னிங்.. அப்படியே நடக்குதே.. 2025 தொடங்கும் முன்பே.. திடீரென பரவும் மர்ம நோய்!

காங்கோ: காங்கோவில் தீவிரமாக பரவி வரும் வினோத நோய் உலக சுகாதார மைய அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில்தான் நாஸ்டர்டாமஸ் வெளியிட்ட கணிப்புகள் உண்மையாகி வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலகம் முழுக்க எதிர்காலத்தை கணித்து வல்லுனர்களின், தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமான நபராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது புத்தகமான Les Propheties என்பதில் கவிதைகளாக எழுதி வைத்துவிட்டு சென்றார்.

விண்வெளி அறிஞர், ஆன்மீகவாதி, தீர்க்கதரிசி என்று அறியப்பட்ட இவர் 465 வருடங்களுக்கு முன் எழுதிய இந்த நூலில் எப்போது என்னென்ன நடக்கும் என்று விலாவரியாக குறிப்பிட்டுள்ளாராம். உலகின் முக்கியமான நிகழ்வுகளை எல்லாம் இவர் இலைமறைகாயாக குறிப்பிட்டுள்ளார். 2025ல் என்ன நடக்கும்: இந்த நிலையில்தான் தற்போது நடந்து வரும் 2025ல் என்ன நடக்கும் என்ற கணிப்புகளை இவரின் புத்தகத்தில் இருந்து வெளியிட்டு உள்ளனர். நாஸ்ட்ராடாமஸின் ஒரு பத்தியில் “தீவுகளின் ராஜா” “பலத்தால் விரட்டப்படுவார்” என்று கூறுகிறது. அவர் மூன்றாம் சார்லஸ் அரசரைக் குறிப்பிடுவதாக சிலர் நம்புகிறார்கள். சார்லஸ் மன்னரைப் பற்றி ஒரு பத்தியில், “விரைவில் ஒரு பேரழிவுகரமான போர் நடக்கும். அது முடிந்த பின் ஒரு புதிய ராஜா பதவி ஏற்பார். அவர் நீண்ட காலம் பூமியை பாதுகாப்பார் என்றுள்ளார்.

“கொடூரமான போர்களால்” சூழப்பட்டு “எதிரிகளை விட மோசமான துரோகங்களால்” சில நாடுகள் வீழ்த்தப்படும் என்று எச்சரித்து உள்ளார். “பழங்கால பிளேக்” வெடிப்பை உலகம் எதிர்கொள்ளும். இங்கிலாந்துக்கு புத்தாண்டு கொண்டாட்டம் அதிகம் இருக்காது.. அதற்கு காரணமாக இந்த பிளேக் அமைந்துவிடும் என்று நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். ஏற்கனவே அவரது COVID-19 தொற்றுநோய் கணிப்பு உண்மையாகிவிட்டதால்.. இந்த முறையும் வேறு ஒரு பெருந்தொற்று பரவுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

காங்கோ நோய்: ஏற்கனவே காங்கோவில் தீவிரமாக பரவி வரும் வினோத நோய் உலக சுகாதார மைய அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில்தான் நாஸ்டர்டாமஸ் வெளியிட்ட கணிப்புகள் உண்மையாகி வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கோவில் பெயர் அறியப்படாத மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. கடந்த 10 நாட்களுக்குள் இந்த நோய் 143 பேரைக் கொன்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, சளி, உடல் வலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக காங்கோவில் உள்ள குவாங்கோ மாகாணத்தின் துணை ஆளுநரான ரெமி சாகி மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் அப்பல்லினேர் யூம்பா ஆகியோர் தெரிவித்து உள்ளனர். 200க்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அவர்களின் எச்சில் மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து நோயை அடையாளம் காண ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உலக சுகாதார மையம் அறிக்கை: காங்கோவில் தீவிரமாக பரவி வரும் காணப்படாத நோய் பற்றிய விரிவான விளக்கத்தை உலக சுகாதார மையமான WHO வெளியிட்டுள்ளது. இங்கே ஒரு விரைவான சுருக்கம்: கேஸ்கள் மற்றும் இறப்புகள்: 406 சந்தேகத்திற்கிடமான நோய் பாதிப்புகள் பதிவாகி உள்ளன, 143 இறப்புகள் (100 சுகாதார மையங்களில், 43 வீட்டில்) மக்கள்தொகை: பெரும்பாலான கேஸ்கள் குழந்தைகளை தாக்கி உள்ளது. அனைத்து கடுமையான கேஸ்களும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களை அதிகம் தாக்கி உள்ளது. எப்போது தொடக்கம்: அக்டோபர் 24 அன்று முதல் கேஸ் பதிவானது. நவம்பர் தொடக்கத்தில் கேஸ்கள்உச்சத்தை எட்டியதாகத் தெரிகிறது ஆனால் பரவல் இன்னும் தொடர்கிறது.

காரணங்கள்: கடுமையான நிமோனியா (சுவாசப் பாதை தொற்று), இன்ஃப்ளூயன்ஸா, கோவிட்-19, தட்டம்மை, ஈ.கோலி மற்றும் மலேரியாவிலிருந்து வரும் ஹீமோலிடிக் யூரிமிக் சிண்ட்ரோம், ஊட்டச் சத்து குறைபாடு ஆகியவை பங்களிக்கும் காரணியாகும். ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம். குடும்பங்களுக்குள் பரவக்கூடிய சாத்தியம் அதிகம் உள்ளது. அறிகுறிகள்: பொதுவாக கிளைமேட் மாறுவதால் ஏற்படும் சீசன் காய்ச்சல் ஏற்படும். அது போல இந்த நோய் ஏற்பட்டு வருகிறது. இது காய்ச்சல் போல இருந்தாலும் காய்ச்சல் இல்லை என்று கூறப்படுகிறது. சிலருக்கு மருந்து எடுத்தாலும் குணமாகவில்லை என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதற்கான அறிகுறிகள் பின்வருமாறு, சளி, இருமல், அதிக காய்ச்சல், உடல்வலி, தலைவலி, தும்மல், மூக்கு அடைப்பு , தொண்டை புண், கண்களில் நீர் வடிதல், மூக்கிலிருந்து தொண்டைக்குள் சளி செல்லுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் பலருக்கும் காய்ச்சல் ஏற்படுகிறது. சாதாரண சீசன் காய்ச்சல் போல இல்லாமல் இந்த காய்ச்சல் காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதோடு இது இயல்பு வாழ்க்கையை முடக்கும் விதமாக அமைந்து உள்ளது.