சும்மா கடல் ஓரம் போன நண்டை பிடித்து, வேட்டிக்கு உள்ளே விட்ட கதை தான் இது. நண்டு சும்மா இருக்குமா ?
ஐயோ யார் பெற்ற பிள்ளையோ ? இப்படி புத்தி பேதலித்து அலைந்து திரிகிறது. இவரைப் பற்றி இனி, என்னென்ன செய்திகள் வர இருக்கிறது என்று தெரியவில்லை. நேற்றைய தினம்(08) யாழ் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த அர்ச்சுணா, அங்கே இருந்த வைத்தியர்கள் சிலரையும், பணியாளர்களையும் அச்சுறுத்தியுள்ளார். அதாவது உண்மையில் நடந்த விடையம் என்னவென்றால், யாழ்ப்பாண வைத்தியர்கள், தொடர்பாக பல தொடர் குற்றச்சாட்டுகளை கூறி, YouTubeபில் பிரபல்யமாகி. அதனூடாக வாக்கைப் பெற்று MP ஆனவர் அர்ச்சுணா. ஆனால் இவர் கையில் தற்போது சரக்கு இல்லை !
அதாவது அவுத்து விட எந்த ஒரு செய்தியும் இல்லை ! Youtubeல் வைரல் ஆக முடியவில்லை. இதனால் இவர் சில ஆதரங்களை தேடி வருகிறார். இதன் காரணத்தால் சில விடையங்களை நோண்டி எடுக்க, யாழ் வைத்தியசாலை சென்றுள்ளார். ஆனால் நிலமை தலை கீழாக மாறிவிட்டது. முன்னர் போல அவர் சொல்லும் பேச்சைக் கேட்க்க எவரும் தயார இல்லை. போதாக் குறைக்கு மருத்துவர் சத்திய மூர்த்தி அங்கே இருந்ததால். நிலமை மேலும் கவலைக்கிடமாக மாறியுள்ளது. இதனால் அங்கே வேலை பார்த்த நபர்கள், மருத்துவர்கள் என்று சுமார் 4 பேர் பொலிஸ் நிலையம் சென்று, முறைப்பாடு செய்துள்ளார்கள்.
இதனை அடுத்துப் பொலிசார் முறைப்பாட்டை ஏற்றுக் கொண்டு, விசாரணை நடத்த உள்ளார்கள். மருத்துவர்களை வேலை செய்ய விடாமல் தடுப்பது என்பது இலங்கை சட்ட திட்டப் பிரகாரம் மிகக் கடுமையான தண்டனைக்கு உரியது. சும்மா கடல் ஓரம் போன நண்டை பிடித்து, வேட்டிக்கு உள்ளே விட்ட கதை தான் இது. நண்டு சும்மா இருக்குமா ?