ஈழத் தமிழர் தொடர்பாக தனது நிலைப்பாட்டை ஏன் விஜய் இன்னும் தெளிவு படுத்தவில்லை ?

ஈழத் தமிழர் தொடர்பாக தனது நிலைப்பாட்டை ஏன் விஜய் இன்னும் தெளிவு படுத்தவில்லை ?

பல மேடைகளில் தற்போது TVK கட்சி தலைவர் விஜய் அவர்கள் பேசி வருகிறார். அமெரிக்கா குறித்தும் , இந்திய தேசிய அரசியல் குறித்தும், மேலும் சொல்லப் போனால் வெளிநாடுகளில் சென்று ஓடி ஒளிந்துள்ள இந்தியர்கள் பற்றிக் கூட அவர் பேசி வரும் நிலையில். ஈழத் தமிழர்கள் தொடர்பாக அவர் எதனையும் ஏன் இதுவரை பேசவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது மனைவி சங்கீதா, ஒரு ஈழத் தமிழர் என்பதனை எவரும் மறுக்க முடியாது.

குறிப்பாக அவர் தி.மு.கவை கடுமையாக தாக்கிப் பேசி வருகிறார். ஆனால் கலைஞர் ஆனாலும் சரி, அவரது மகன் ஸ்டாலின் என்றாலும் சரி, அவர்களிடம் ஈழத் தமிழர்கள் தொடர்பாக ஒரு தீர்கமான நிலைப்பாடு உள்ளது. டெசோ மாநாட்டை கலைஞர் 2 தடவை கூட்டியுள்ளார். இதனை ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு என்று அழைப்பார்கள். இதேபோல செல்வி ஜெயலலிதா அவர்களும், ஈழத் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை தேவை என்று, தமிழக சட்ட மன்றில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருந்தார்.

இதுபோல அண்ணன் சீமான் அவர்களும், இலங்கைத் தமிழர்கள் விடையத்தில் ஒரு தீர்கமான நிலைப்பாட்டில் உள்ளார். ஆனால் TVK கட்சித் தலைவரும் நடிகருமான விஜய், ஏன் இதுவரை ஈழத் தமிழர்கள் தொடர்பாக பேசவில்லை என்பது, மிகவும் சந்தேகமாக இருப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். தமிழ் தேசியம் பேசும் விஜய் அவர்கள், ஈழ தமிழர்கள் தொடர்பாக என்ன நிலைப்பாட்டில் உள்ளார் என்பதனை அவர் தெளிவு படுத்துவது நல்லது. சோழர் வழி வந்த, இன்றுவரை வேற்று இனங்களோடு கலப்பில் இல்லாமல், தூய சோழர் தமிழ் பேசும், வீரப் பெருங்குடிகளான ஈழத் தமிழர்களை தமிழகம் பாதுகாக்க வேண்டும் ! சோழர் பரம்பரையின் எச்சங்கள் அவர்கள் என்பதனை மறந்துவிட முடியாது.