தி.மு.க வை ஒட்டுமொத்தமாக டேமேஜ் செய்யும் விஜய் – துணைக்கு வந்தது அ.தி.மு.க !

தி.மு.க வை ஒட்டுமொத்தமாக டேமேஜ் செய்யும் விஜய் – துணைக்கு வந்தது அ.தி.மு.க !

பலமான எதிரியை முதலில் விழ்த்தவேண்டும் என்பார்கள். அதனை மிகவும் நேர்த்தியாகச் செய்ய ஆரம்பித்து விட்டார் விஜய். நேற்று நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில், அவர் தி.மு.காவை பகிரங்கமாக தாக்கிப் பேசினார். இதேவேளை தி.மு.க கூட்டணில் உள்ள தொல் திருமாவை ஆதரித்துப் பேசினார். இதனால் கூட்டணிக்கு உள்ளே பெரும் குழப்பம் வந்துவிடப் போகிறது என்கிறார்கள்.

விஜய் சொல்வது போலவே கூட்டணியில் திருமாவளவனுக்கு அழுத்தம் இருப்பதை உணருகிறோம் என்றும், அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்துகொண்டிருக்க வேண்டும் என்றும் அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் கே பி முனுசாமி கூறினார். மேலும் வாரிசு அடிப்படையில் தான் ஸ்டாலின் முதல்வராகியுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவை வைத்து விஜய் பெரும் அரசியல் செய்ய, தற்போது துணைக்கு அதிமுகவும் களத்தில் இறங்கி விஜய்க்கு ஆதரவு கொடுக்க, தமிழக அரசியல் பெரும் சூடு பிடித்துள்ளது. யார் சொன்னது விஜய்க்கு அரசியல் தெரியாது என்று. எப்படி காய் நகர்த்துகிறார் என்று பார்த்தீர்கள் அல்லவா ?