ஆட்டம் போட்ட வங்கதேசம்.. எதிர்பார்க்காத நேரத்தில் அடித்த “ஆர்கன்” கிளர்ச்சி படை.. யார் இவர்கள்!

ஆட்டம் போட்ட வங்கதேசம்.. எதிர்பார்க்காத நேரத்தில் அடித்த “ஆர்கன்” கிளர்ச்சி படை.. யார் இவர்கள்!

 

டாக்கா: நமது அண்டை நாடான வங்கதேசத்திற்கும் இடையேயான உறவில் சமீப காலமாகச் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள இந்துக்கள் மீது அதிகரிக்கும் தாக்குதல்களே இதற்குக் காரணமாகும். அங்கு ஏற்கனவே ஹசீனா ஆட்சி கவிழ்ந்து இப்போது இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது. இந்த குழப்பத்திற்கு இடையே அங்குள்ள சில பிராந்தியங்களை ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். யார் இந்த ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

வங்கதேசத்தில் எப்போது ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததோ அப்போது முதலே பெரும் குழப்பமான ஒரு சூழலே நிலவி வருகிறது. அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ள நிலையில், அங்குள்ள சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல்கள் நடந்து வருகிறது.

ஆட்டம் போட்ட வங்கதேசம்: குறிப்பாக இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இஸ்கான் துறவியை கூட கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அந்தளவுக்கு நிலைமை மோசமாகவே உள்ளது. இந்தச் சூழலில் தான் அங்கு சில பிராந்தியங்களை ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். யார் இந்த ஆர்கன் கிளர்ச்சியாளர்கள்.. இவர்கள் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

ஆர்கன் கிளர்ச்சியாளர்கள்: மேற்கு மியான்மரின் ரக்கைன் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் இந்த ஆர்கன் கிளர்ச்சியாளர்கள்.. கடந்தாண்டு இந்த ராணுவ குழு மியான்மரில் பல பகுதிகளைக் கைப்பற்றினர். மியான்மரில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் இருக்கும் நிலையில், அவர்களைக் காட்டிலும் அதிக பகுதிகள் இந்த ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் வசமே இருக்கிறது. 1780கள் வரை ஆர்கன் என்பது தனியாகச் செயல்படும் ஒரு ராஜ்ஜியமாகவே இருந்தது. ஆனால், 1784ம் ஆண்டு பர்மிய மன்னர்களால் ஆர்கன் ராஜ்ஜியத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதற்கிடையே சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்களுக்கான தனி தேசத்தை உருவாக்கும் கனவோடு இவர்கள் பயணித்து வருகிறார்கள்.

பின்னணி: இந்த நவீன ஆர்கன் கிளர்ச்சி படை என்பது கடந்த 2009ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதை மாணவர் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் செயற்பாட்டாளர் ட்வான் ம்ராட் நயிங் என்பவரைத் தொடங்கி இருக்கிறார். மியான்மரில் ஏகப்பட்ட கிளர்ச்சி படை இருக்கும் நிலையில், அதில் ஒன்றாகவே ஆர்கன் இருந்துள்ளது. சுமார் 10 ஆண்டுகள் வரை பெரியளவில் செயல்பாடுகள் எதுவும் இல்லாமலேயே இருந்தது.

இந்தச் சூழலில் தான் கடந்த 2019ம் ஆண்டு தொடக்கத்தில் மியான்மர் ராக்கைன் பகுதியில் உள்ள 4 போலீஸ் நிலையத்தைக் குறிவைத்து மிகப் பெரிய தாக்குதலை இந்த கிளர்ச்சியாளர்கள் நடத்தினர். அந்நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நடந்த இந்த தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தேசியளவில் கவனம்: ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் இப்படி மெல்ல வளர்ந்த கொண்டு இருக்கும் போது தான் கடந்த 2021ம் ஆண்டு மியான்மரில் இருந்த மக்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதற்கு ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்த போதிலும், அவர்கள் எதிர்வினையாற்றவில்லை. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே ராணுவத்தைக் குறிவைத்து இந்த ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். You May Also Like

இப்படியே மெல்ல தாக்குதல்களை நடத்தி மியான்மரின் ரக்கைன், சின் ஆகிய பிராந்தியங்களை தங்கள் வசம் கொண்டு வந்துவிட்டனர். இவை எல்லாமே வங்கதேச எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பகுதிகள் ஆகும். மியான்மர் எல்லைப் பகுதியைக் கைப்பற்றி வந்த ஆர்கன் ராணுவம் (AA) கிளர்ச்சி குழு இப்போது முதல்முறையாக வங்கதேசத்திற்குள்ளேயே நேரடியாக இறங்கியுள்ளது. வங்கதேசம்: வங்கதேசத்தின் தெக்னாப் பிராந்தியத்தில் உள்ள சில பிராந்தியங்களை இந்த ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. வங்கதேசத்தின் பிரபல செயின் மார்டின் தீவு அருகே அமைந்துள்ள இந்த பகுதியில் ரோஹிங்கியா அகதிகள் முகாமும் இருக்கிறது. இதனால் வங்கதேசத்திற்கு இது ரொம்பவே முக்கியமான ஒரு பகுதியாக இருக்கிறது. அது இப்போது ஆர்கன் கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.