இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரனி இலங்கை சென்றிருந்தார். இலங்கையில் நடக்க இருந்த பெரும் இசை விழா ஒன்றுக்காகவே அவர் சென்றதாக அதிர்வு இணையம் அறிகிறது. இந்த நிலையில் இலங்கையில் அவருக்கு நெருக்கமான சிலர், கொழும்பில் ஒரு ஆயூள்வேத வைத்தியர் இருப்பதாக சொல்லியுள்ளார்கள். பவதாரனி நீண்ட காலமாக கல்லீரல் பிரச்சனையால் அவதியுற்று வந்துள்ளார். இன் நிலையில் , இந்தியாவில் தீர்க்க முடியாத இந்த வியாதியை இலங்கை வைத்தியர் தீர்த்துவைப்பார் என நம்பி. கொழும்பில் உள்ள முஸ்லீம் ஆயுள்வேத வைத்தியரிடம் சென்ற நிலையில்..
அவர் கொடுத்த மருந்தால் அலர்ஜி(ஒவ்வாமை) ஏற்பட்டு , அவரது நிலை மேலும் மோசமானது. அதன் பின்னரே அவர் “”லாங்கா”” வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். “லங்கா” மருத்துவமனையில் அவரை அனுமதித்தவேளை அவர் மிக மோசமான நிலையில் இருந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இன் நிலையில் 40.000 ஆயிரம் 50.000 ரூபா கொடுத்து டிக்கெட்டை வாங்கி, இசை நிகழ்ச்சியை காண இருந்த அனைவருக்கும் வயிற்றில் புளியைக் கரைப்பது போல இந்த நிகழ்வு இருக்கிறது. இசை நிகழ்ச்சி நடக்குமா இல்லையா என்று தெரியாமல் மக்கள் குளப்பத்தில் உள்ளார்கள்.
இதற்கு லங்கா ஸ்ரீ என்ற இணையமே முதன்மை ஸ்பான்ஸர்களாக இருக்கிறார்கள். விற்ற டிக்கெட்டின் பணம் திருப்பிக் கிடைக்குமா ? இல்லையா ? என்ற பெரும் சந்தேகம் உள்ளது. வெறும் 48 வயதில் பாடகி பவதாரனி இறந்தது தமிழக திரை உலகை அதிரவைத்துள்ளது. உடலை சென்னைக்கு கொண்டுசெல்ல அவசர ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.