தமிழ் சினிமாவில் இசைஞானியாக வலம் வருபவர் இளையராஜா. இவரின் மகள்தான் பவதாரினி. இளையராஜாவின் இசையில் பல பாடல்களை அவர் பாடியிருக்கிறார். குறிப்பாக பாரதி படத்தில் இவர் பாடிய ‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி சமீபத்தில் இலங்கை சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தர். இந்நிலையில், இலங்கையில் இருக்கும்போதே உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 47. இவரின் உடல் இலங்கையிலிருந்து சென்னைக்கு கொண்டு வரும் வேலைகள் நடந்து வருகிறது.
பவதாரிணியின் திடீர் மரணம் இசை ரசிகர்களுக்கும், இளையராஜாவின் ரசிகர்களும், திரையுலகினருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை 5.30 மணியளவில் அவர் இலங்கையில் மரணமடைந்திருக்கிறார். பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த ராசைய்யா படம் மூலம் இவர் சினிமாவில் பாட துவங்கினார்.
அதன்பின் ராமன் அப்துல்லா, புதிய கீதை ஆகிய படங்களில் பாடியிருக்கிறார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் பல வருடங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல் நாளை சென்னைக்கு வரும் என சொல்லப்படுகிறது. எனவே, அவரின் இறுதி ஊர்வலம் நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவதாரிணியின் மறைவுக்கு சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.