Source: MSN News: UK Storm Shadow missiles kill ‘500 North Korean troops and top Russian general’
பிரித்தானியா கொடுத்த ஸ்டோம் ஷடோ ஏவுகணையை, ரஷ்யாவில் உள்ள Maryino,(Kursk) என்ற நகரத்தில் அமைந்திருக்கும் கட்டளைத் தளம் மீது உக்ரைன் ஏவி இருந்தது. இந்த தாக்குதல் கடந்த 20ம் திகதி மதியம் நடத்தப்பட்டது. பெரும் வெடிப்புச் சத்தம் ஒன்றை அப்பகுதி மக்கள் உணர்ந்தார்கள். வானத்தில் பெரும் புகை மூட்டம் காணப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் ரஷ்யா இந்த தாக்குதல் தொடர்பாக கடந்த 5 நாட்களாக எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும் இன்று கிடைக்கப்பெற்ற செய்திகளின் அடிப்படையில்.
ரஷ்யாவுக்குச் சென்று அங்கே ரஷ்ய ராணுவத்திற்கு உதவி புரிந்து வந்த சுமார் 500 வட கொரிய ரானுவத்தினரின் உடல்கள் அந்த கட்டளைத் தளத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு ரஷ்யாவின் மிக முக்கிய தளபதியாக கருதப்படும் லெப்டினன் ஜெனரல் Valery Solodchukல் கொல்லப்பட்டுள்ளார்.
இது போக மேலும் 18 மூத்த ரஷ்ய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். சம்பவம் நடந்தவேளை(20) அன்று பங்கரில் ஒரு கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்ததாவும். ஆனால் திடீரென 17 அடி நீளமான பிரித்தானிய ஏவுகணை அந்த தளத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் தாக்கி அழித்துள்ளது. இந்தத் தாக்குதலில், கூட்டம் நடைபெற்ற பங்கரும் சிதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா தான் தயாரித்து வைத்துள்ள, அதி நவீன ஆயுதங்களை இதுவரை உக்ரைனுக்கு கொடுக்கவில்லை. மாறாக 2ம் நிலை மற்றும் 3ம் நிலையில் உள்ள ஆயுதங்களையே உக்ரைனுக்கு கொடுத்து உள்ளது. அதில் ஒன்று தான் இந்த ஸ்டோம் ஷடோ. சுமார் 17 அடி நீளமான இந்த ஏவுகனை ஒரு வகையில் சொல்லப் போனால், சிறிய ரக அணு குண்டு ஒன்றுக்குச் சமனானது. பெரிய அழிவை ஏற்படுத்தும். அப்படிப் பார்த்தால் பிரித்தானியாவிடன் இன்னும் படு பயங்கரமான ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.
இந்த தாக்குதல் காரணமாக கடும் கோபம் அடைந்த புட்டின், 20ம் திகதிக்குப் பின்னர், உக்ரைன் மீது சூப்பர் சோனிக் ஏவுகணையை பாவித்து தாக்குதல் நடத்தி இருந்தார். இதுபோக லண்டன் ரவல்கர் சதுக்கத்தை தமது அணு குண்டு எப்படி தாக்கும் என்று TV நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஒருவர் விவரித்தும் இருந்தார். தற்போது ரஷ்யாவின் மிகப் பெரிய பயம், இந்த ஸ்டோம் ஷடோ ஏவுகணை தான்.