பாராளுமன்ற அமர்வில், எதிர்கட்சி தலைவர் ஆசனத்தில் சென்று அமர்ந்து. பின்னர் எழும்ப மாட்டேன் என்று அடம் பிடித்த அர்ச்சுணா, இன்று(25) பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இன்று (25) நடைபெற்ற திசைமுகப்படுத்தல் செயலமர்வில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரினார். இதேவேளை தன்னை புலி என்று பல சிங்களப் பத்திரிகைகள் தெரிவித்து இருந்தது என்றும், அதனால் நான் வருத்தமாக இருக்கிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“எங்கே அமர வேண்டும் என்று கேட்டேன்.. அப்போது சொன்னார்கள் மறுபுறம் போய் உட்காருங்க. எந்த பிரச்சனையும் இல்லை டொக்டர், நீங்கள் எங்கே வேண்டும் என்றாலும் அமருங்கள் என்று. பிறகு நாம் முன்னே சென்று அமர்ந்தோம். அதன் பின்னர் தான் பிரச்சனை தோன்றியது என்றார். நான் கொம்பஸ் சென்று பழக்கம் இல்லாதவன், அதனால் திசை தெரியாமல் சென்றுவிட்டேன் என்று ஜாடை மாடையாக JVPக்கும் ஆதரவாகப் பேசியுள்ளார் மருத்துவர் அர்ச்சுணா.