இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் இனிமேல் இடைத்தரகராக செயல்படுவதை நிறுத்துவதாக கத்தார் அறிவித்து உள்ளது. இரண்டு தரப்பிற்கும் இடையிலான போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட அமைதி பேச்சுவார்த்தைகளை கத்தார் மேற்கொண்டு வந்தது. அதை நிறுத்துவதாக அறிவித்து உள்ளது.
இஸ்ரேல், ஹமாஸ் இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சொல்கிறார்களே தவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வருவது இல்லை. இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தைக்கும்.. அமைதிக்கும் தாமாக முன்வருவது இல்லை. அவர்கள் ஆர்வம் காட்டும் போது நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அதுவரை பேச்சுவார்த்தையை நடத்த நாங்கள் தயாராக இல்லை.
சமீபத்தில்.. கத்தாரில் ஹமாஸ் போராளிகள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் தாக்கிக்கொண்டு இருக்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹமாஸ் படைகள் அத்துமீறி தாக்குகின்றன. போரை நிறுத்த விருப்பம் இல்லை. அப்படி இருக்கும் போது ஹமாஸ் படையினரை பேச்சுவார்த்தை என்ற பெயரில் கத்தார் உள்ளே அனுமதிக்க முடியாது. ஹமாஸின் அரசியல் கட்டிடம் தோஹாவில் உள்ளது. இனியும் அது செயல்பட அனுமதிக்கப்படாது என்றும் அறிவித்து உள்ளது. 10 நாட்களுக்கு முன் இஸ்ரேல் – கத்தார் இரண்டு தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வந்தோம்.
இரண்டு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தையில் முடிவு வரும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால் இரண்டு தரப்பும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி இருக்க நாங்கள் பேச்சுவார்த்தையை தொடர்வது சரியாக இருக்காது. அதனால் பேச்சுவார்த்தையை முடிக்கிறோம் என்று கத்தார் கூறி உள்ளது. கத்தாரில் ஹமாஸ் போராளிகள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் தாங்கிக்கொண்டு இருக்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. என்று அமெரிக்கா எச்சரித்த நிலையில்.. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக வெற்றிபெற்ற அதே நேரத்தில் கத்தார் இந்த முடிவை எடுத்து இருப்பது கவனம் பெற்றுள்ளது.
இஸ்ரேலில் 1995ல் செய்யப்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தம்தான் ஹமாஸ் வளர்ச்சி அடைய முக்கிய காரணமாக அமைந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி வெஸ்ட் பேங்க், பாலஸ்தீனத்தின் பெரும்பகுதி இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வந்தது. பாலஸ்தீன விடுதலையில் பிஎல்ஓ என்ற அமைப்புதான் அத்தனை காலம் போராடி வந்தது. அவர்கள் சரியாக போராடவில்லை என்று கூறி.. அவர்களுக்கு பதிலாக ஆயுதம் தாங்கிய அமைப்பான ஹமாஸ் படையும் காசாவில் களமிறங்கியது. அருகில் எகிப்தில் தோன்றிய அந்த படை..
பாலஸ்தீன சுதந்திரத்திற்காக காஸாவிற்கு சென்றது. ஹமாஸ் 1987 இல் நிறுவப்பட்டது, எகிப்தின் முஸ்லீம் சகோதரத்துவ இயக்கம் என்ற பெயரில் இந்த குழு தோன்றியது. இது 1950 களில் இருந்து காசா பகுதியில் தீவிரமாக செயல்பட்டு பல்வேறு தொண்டு மற்றும் சமூக அமைப்புகளின் நெட்வொர்க் மூலம் செல்வாக்கைப் பெற்றது.
980 களில் ஹமாஸ் இயக்கம் ஒரு சக்திவாய்ந்த அரசியல் அமைப்பாக மாறியது, PLO வின் செல்வாக்கை மீறி இந்த அமைப்பு வளர்ந்தது. அதன்பின் 2000-2005 வரை காஸாவிலும், ஜெருசலேமிலும் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் 2005ல் காசாவில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது. காஸா ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ளது. ஆனால் காஸாவின் அனைத்து எல்லைகளும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஹமாஸ் என்பதை மேற்கு உலகம் தீவிரவாத அமைப்பு என்று சொன்னாலும் பல்வேறு உலக நாடுகள் அப்படி சொல்வது இல்லை. அவர்களை பொறுத்தவரை ஹமாஸ் என்பது பாலஸ்தீன விடுதலை அமைப்பு ஆகும். இவர்கள் எந்த அளவிற்கு ஜனநாயக ரீதியான அமைப்பு என்றால்.. இவர்கள் தேர்தல் நடத்துவார்கள்.. பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்களை போடுவார்கள்., காஸாவில் நேர்மையாக மக்கள் அதிகார ஆட்சியை நடத்தி வருகிறார்கள்.