3ம் உலகப்போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது.. அதுவும் அணு ஆயுத போர்முறை? என்ன நடக்கிறது உலக அரசியலில்?

3ம் உலகப்போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது.. அதுவும் அணு ஆயுத போர்முறை? என்ன நடக்கிறது உலக அரசியலில்?

உலக அளவில் ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதல், ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல்கள் புதிய உச்சத்தை, புதிய பரிமாணத்தை அடைந்து உள்ளன. இந்த மோதல்கள் காரணமாக ஏற்கனவே 3ம் உலகப்போர் தொடங்கி விட்டதோ என்ற கேள்வியும் அச்சமும் எழுந்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் மோதல்: ரஷ்யா உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் தாண்டி செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணை அல்லது ICBM ஏவுகணைகளை ஏவி தாக்கி உள்ளது. இது அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.

இதை தேவைக்கு ஏற்றபடி பயன்படுத்திக்கொள்ளலாம். தேவையான நேரத்தில் அணு குண்டை வைத்து ஏவலாம். இல்லையென்றால் அணுகுண்டு இல்லாமல் ஏவ முடியும். இதை போர்க்கப்பலில் இருந்தும் கூட ஏவ முடியும். பொதுவாக இந்த ஏவுகணையை ஒரு நாடு பெரிய போரில் மட்டுமே பயன்படுத்தும். அல்லது பெரிய சோதனைகளை செய்தால் பயன்படுத்தும். அணு குண்டு சோதனைகளை மேற்கொள்ள இது போன்ற கண்டம் தாண்டி செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தும். இப்படிப்பட்ட ஏவுகணையை உக்ரைன் மீது ரஷ்யா பயன்படுத்தி உள்ளது. இதனால் எங்கே ரஷ்யா அடுத்து அணு ஆயுத தாக்குதல் நடத்த திட்டமிடுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போக ரஷ்ய அதிபர் புடின்.. ரஷ்யாவில் இருக்கும் அணு ஆயுத ஷெல்டர்களை தயார் செய்யும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக அணு ஆயுத ஷெல்டர்கள்.. அணு ஆயுத தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் பங்கர்கள் ஆகும்.

முக்கிய தலைவர்கள்.. பெருமளவிலான மக்களை பாதுகாக்கும் விதமாக பங்கர்கள் அமைக்கப்படும். அணு கதிர்வீச்சு பாதிக்காத வகையில் பாதுகாப்பாக பல மீட்டர் அகலமான சுவர்கள் பூமிக்கு அடியில் சுரங்கமாக அமைக்கப்பட்டு இருக்கும். இது போன்று உலகம் முழுக்கவே பங்கர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்யாவில் இருக்கும் அணு ஆயுத ஷெல்டர்களை தயார் செய்யும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த கூடாது என்ற விதியை வைத்து உள்ளது ரஷ்யா. ஆனால் இந்த விதியை ரஷ்யா தற்போது அதிபர் புடின் உத்தரவின் பெயரில் மாற்றி உள்ளது.

அதன்படி அணு சக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி உக்ரைன் உள்ளிட்ட அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும்.. என்று புடின் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் ரஷ்யாவின் கொள்கை மாற்றத்திற்கு அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஈரான் முடிவு; சமீபத்தில் ஈரான் மீது ஐநாவின் அணு ஆயுத வாட்ச் டாக்.. அதாவது கண்காணிப்பு அமைப்பு விமர்சனம் வைத்து இருந்தது. அணு சக்தியை பயன்படுத்துவதில் ஈரான் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கவில்லை.. அவர்கள் அணுவை பயன்படுத்தும் விதத்தில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க மறுக்கிறார்கள் என்று விமர்சனம் செய்து இருந்தது. இதன் காரணமாக கடுப்பான ஈரான்.. தற்போது தங்களின் புதிய சென்ட்ரிபுகல் அமைப்புகளை ஆக்டிவேட் செய்ய போகிறதாம். அதனால் சென்ட்ரிபுகல் அமைப்பில்தான் அணுவை செறிவூட்ட முடியும். அதாவது ஒரு சிலிண்டர் அமைப்புகளை குறிப்பிட்ட வாயுக்களை அனுப்ப வேண்டும். இதன் மூலம் அணுவை செறிவூட்ட முடியும்.

இப்படிப்பட்ட அணுவை செறிவூட்டினால் மட்டுமே.. அதை ஆயுதமாக பயன்படுத்த முடியும். இதைத்தான் ஆக்டிவேட் செய்ய போவதாக ஈரான் அறிவித்து உள்ளது. அணு உலை: ஏற்கனவே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல்கள் வருகின்றன. சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.. ஈரான் அணு ஆயுதம்: இதற்கு இடையில்தான் தங்களின் அணு ஆயுத கொள்கையை ,மறுபரிசீலனை செய்ய போவதாக ஈரான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அணு ஆயுதம் வேண்டாம் என்ற கொள்கையை அந்த நாடு மறுபரிசீலனை செய்யும் என்று அறிவித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடன் ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை செய்துள்ளது. 2015ல் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் 2018ல் டிரம்ப் ஆட்சியில் நீக்கப்பட்டது. ஈரான் அமெரிக்கா சொல்வதை கேட்கவில்லை மற்ற ஆயுத சோதனைகளை செய்கிறது என்று கூறி ஒப்பந்தத்தை நீக்கியது. இதன் காரணமாக ஈரானுக்கு தற்போது அணு ஆயுதம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில் தற்போது ஈரானிடம் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது.

முன்பு 200 கிலோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இருந்த ஒப்பந்தம் நீக்கப்பட்ட நிலையில் அணு ஆயுதம் செய்ய தயாரான தரத்தில் இருக்கும் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. 3ம் உலகப்போர் : இதெல்லாம் பார்க்கும் போது உலக அளவில் ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதல், ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல்கள் புதிய உச்சத்தை, புதிய பரிமாணத்தை அடைந்து உள்ளன. இந்த மோதல்கள் காரணமாக ஏற்கனவே 3ம் உலகப்போர் தொடங்கி விட்டதோ என்ற கேள்வியும் அச்சமும் எழுந்துள்ளது. அதுவும் இது சாதாரண போர் அல்ல.. அணு ஆயுத போராக மாறுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த போரில் நேரடியாகவும்.. மறைமுகமாகவும் ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான், சிரியா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட முக்கியமான நாடுகள் பங்கெடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.