போற போக்கு பார்த்தா 500 கோடி தாண்டும் போல இருக்கு?அமரன் பட சாதனை!

போற போக்கு பார்த்தா 500 கோடி தாண்டும் போல இருக்கு?அமரன் பட சாதனை!

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகின்றது. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படமாக அமரன் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கையை அப்படியே திரையில் கொண்டு வந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்த சிவகார்த்திகேயனுக்கும் மிகப்பெரிய பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அதைப்போல மேலும் ஒருமுறை தன் அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்தி அனைவரையும் ஈர்த்தார் சாய் பல்லவி. ஜி.வி பிரகாஷின் இசை, கமலின் தயாரிப்பு என அமரன் படத்தில் அமைந்த அனைத்துமே சிறப்பாக இருந்தது. இதன் காரணமாக இப்படத்தின் வசூலும் அமோகமாக இருந்து வருகின்றது. அதன்படி முதல் மூன்று நாட்களிலேயே அமரன் திரைப்படம் நூறு கோடிக்கு மேல் வசூலித்தது.

அதைத்தொடர்ந்து இன்றுவரை இப்படம் 250 கோடி வரை வசூலித்துள்ளது. இதன் மூலம் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கின்றார். ரஜினி, விஜய், கமல், அஜித்திற்கு பிறகு 250 கோடி கிளப்பில் இணைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். தன் 22 ஆவது திரைப்படத்திலேயே சிவகார்த்திகேயன் இந்த சாதனையை நிகழ்த்தி காட்டியிருப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகின்றது.

விரைவில் அமரன் திரைப்படம் 300 கோடி வசூலை பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு பெரும் பட்சத்தில் இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படும். இந்நிலையில் சிவகார்த்திகேயன் திரைத்துறையில் காலடியெடுத்து வைத்து 12 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 12 வருடங்களில் தன் ஒவ்வொரு படங்களின் மூலமும் சிவகார்த்திகேயன் புது புது சாதனையை செய்து வருகின்றார்.

இதுவரை அவரின் படங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு வெற்றிகளையும் வசூலையும் குவித்து வந்தன. ஆனால் தற்போது விமர்சன அளவிலும் வசூலிலும் அமரன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சமீபகாலமாக சிவகார்த்திகேயன் வித்யாசமான கதைக்களங்கள் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

மாவீரன், அயலான் ஆகிய படங்களின் வரிசையில் தற்போது அமரன் படமும் இடம்பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து SK23, புறநானூறு என சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்களும் வித்யாசமாக இருக்கும் என கணிக்கப்படுகின்றது. எனவே இனி வரும் காலங்களில் சிவகார்த்திகேயன் மார்க்கெட்டும் அவரின் சம்பளமும் மிகப்பெரிய அளவில் உயரும் என தெரிகின்றது.

இந்நிலையில் வசூலை தொடர்ந்து ஒரு நடிகராக அமரன் சிவகார்த்திகேயனுக்கு மிக முக்கியமான படமாக அமைந்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் ஒரே மாதிரியான படங்களிலும் ரோல்களிலும் நடித்து வருகின்றார் என்ற விமர்சனம் இருந்தது. ஆனால் சமீபகாலமாக வித்யாசமான ரோல்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார்.

குறிப்பாக அமரன் படத்தில் முகுந்த் வரதராஜனாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். மேலும் ஒரு நடிகராக அடுத்தகட்டத்துக்கு சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். எனவே அமரன் திரைப்படம் சிவகார்திகேயனால் மறக்கமுடியாத அவரின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு படமாக இருக்கும் என்பது உறுதியாக சொல்லப்படுகின்றது.