ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் பிரதர் என்ற திரைப்படம் வெளியானது. எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் நடிப்பில் வெளியான இப்படக்ம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார் ஜெயம் ரவி. இப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இதனால் ஜெயம் ரவியின் மார்க்கெட்டும் உயர்ந்தது. ஆனால் அதன் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன் மற்றும் சைரன் ஆகிய படங்கள் தோல்விப்படங்களாக அமைந்தன. இதனால் கட்டாயம் ஒரு வெற்றி தேவை என்ற சூழலுக்கு தள்ளப்பட்டார் ஜெயம் ரவி. அந்த நோக்கத்தோடு பிரதர் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரீச்சானது. எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. கண்டிப்பாக பிரதர் ஜெயம் ரவியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என நம்பப்பட்ட நிலையில் இப்படமும் தோல்வியை சந்தித்தது. இருந்தாலும் ஜெயம் ரவி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார்.
கைவசம் பல படங்களை வைத்துள்ளார். அந்த வகையில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் ஒருவரின் இயக்கத்தில் ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கவுள்ளார். ஏற்கனவே காதலிக்க நேரமில்லை, ஜீனி, டாடா இயக்குனரின் படம் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி அடுத்ததாக ஷங்கரின் உதவியாளர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை பற்றி சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படம் விவாகரத்து பற்றி சொல்லும் படமாக இருக்குமாம். சமீபகாலமாக விவாகரத்து பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதற்கான காரணம் என்ன மற்றும் இதற்கான தீர்வு என்ன என்பதை பற்றி சொல்லும் படமாக இது இருக்கும் என தகவல் வந்துள்ளது.
ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. சமீபத்தில் தான் ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கு விவாகரத்து ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் விவாகரத்து தொடர்பான கதையை கொண்ட படத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் பிரதர் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியின் நடிப்பில் காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கும் இப்படத்தில் நித்யா மேனன் நாயகியாக நடிக்கின்றார். அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.