என் புள்ளைய பத்தி உங்களுக்கெல்லாம் என்ன தெரியும் சின்ன வயசுல இருந்தே பார்த்துட்டு இருக்க, கோபத்துடன் பொங்கி எழுந்த விஜய் அம்மா ஷோபா!

என் புள்ளைய பத்தி உங்களுக்கெல்லாம் என்ன தெரியும் சின்ன வயசுல இருந்தே பார்த்துட்டு இருக்க, கோபத்துடன் பொங்கி எழுந்த விஜய் அம்மா ஷோபா!

சிறுவனாக இருக்கும் போதே சினிமாவில் நடித்தவர் விஜய். தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடிக்கும் படங்களிலும் சிறு வயது விஜயகாந்தாக நடித்திருக்கிறார். எனவே, நடிப்பின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. டீன் ஏஜை எட்டியதும் ‘சினிமாவில் நடிக்க விரும்புகிறேன். என்னை நடிக்க வையுங்கள்’ என கேட்க துவங்கினார்.

 

ஆனால், எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு விஜயை சினிமாவில் விட விருப்பம் இல்லை. நன்றாக படிக்க வைத்து அவரை ஒரு மருத்துவராக்க வேண்டும் என்பதே அவரின் ஆசையாக இருந்தது. எனவே, மகனின் விருப்பத்தை அவர் ஏற்கவில்லை. இதனால், அப்பாவிடம் அடிக்கடி சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே போய்விடுவார் விஜய்.

அதன்பின் அவரை கண்டுபிடித்து அழைத்து வருவது எஸ்.ஏ.சியின் வழக்கம். இது அடிக்கடி நடக்கும். ஒரு கட்டத்தில் விஜய் நடிகனாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் அவரை சினிமாவில் நடிக்க வைக்க முடிவெடுத்தார் விஜய். துவக்கத்தில் அப்பாவின் இயக்கத்தில் மட்டுமே நடித்த விஜய் ஒரு கட்டத்தில் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க துவங்கி பெரிய நடிகராக மாறிவிட்டார்.

பொதுவாக விஜய் அதிகம் பேசாதவர். ஆனால், பிடிவாத குணம் கொண்டவர். எவ்வளவு பெரிய ஹிட் கொடுத்த இயக்குனராக இருந்தாலும் கதை தனக்கு பிடித்தால் மட்டுமே நடிப்பார். 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்துவிட்ட விஜய் இப்போது அரசியலிலும் காலெடுத்து வைத்திருக்கிறார்.

அவரை சில அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். விஜயால் அரசியலில் வெற்றி பெற முடியாது. சினிமாவை போல அது சுலபம் இல்லை. கமலை போல இவரும் அரசியலில் காணாமல் போய்விடுவார். 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் விஜய் சினிமாவில் நடிக்க வந்துவிடுவார் என்றெல்லாம் பேசுகிறார்கள்.

இந்நிலையில், ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய விஜயின் அம்மா ஷோபா ‘விஜய் மருத்துவராக வேண்டும் என ஆசைப்பட்ட நாங்கள் அவரை டாக்டர்..டாக்டர் என்று சொன்னோம். அவரோ ஆக்டர்.. ஆக்டர்.. என சொல்லி நடிகராகிவிட்டார்.. இப்போது வேறொரு பரிமாணத்தை எடுத்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே விஜய் என்ன நினைக்கிறாரோ அதைத்தான் செய்வார். நினைத்ததை செய்து முடிக்காமல் விடமாட்டார். அதுதான் விஜயின் குணம்’ என பேசியிருக்கிறார்.