பேசாமல் தான் ராணுவத்தில் சேர்ந்திருக்கலாம்,இயக்குனராக மாறிவிட்டேனே!அமரன் படம் பார்த்த பின்பு பிரபல இயக்குனரின் கருத்து

பேசாமல் தான் ராணுவத்தில் சேர்ந்திருக்கலாம்,இயக்குனராக மாறிவிட்டேனே!அமரன் படம் பார்த்த பின்பு பிரபல இயக்குனரின் கருத்து
தீபாவளி ரிலீசாக நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது சிவகார்த்திகேயனின் 'அமரன்'. 
பலரின் பாராட்டுக்களையும் இப்படம் குவித்து வருகிறது. இந்நிலையில் 'அமரன்' 
படத்திற்கு பிரபல இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பாராட்டு தெரிவித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படம் அமோக வரவேற்பினை பெற்று வசூலை அள்ளி வருகிறது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ளது ‘அமரன்’. தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த எஸ்கே, முழுக்க முழுக்க சீரியஸான ஆக்ஷன் ஜானரில் ‘அமரன்’ படத்தில் பின்னிபெடல் எடுத்துள்ளார். சாய் பல்லவியும் நடிப்பில் அதகளப்படுத்தியுள்ளார். இதனால் திரையரங்குகளில் பலரும் இப்படத்தினை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘அமரன்’ படத்திற்கு இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பாராட்டு தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நான் இராணுவத்தில் சேர என் பெற்றோர் ஆசைப்பட்டனர். நுழைவு தேர்வில் வெற்றி பெற்றாலும் அங்கு செல்ல பயந்தேன். இன்று ‘அமரன்’ படத்தை பாரத்த பிறகு தவறான முடிவை எடுத்து விட்டேனோ எனத் தோன்றியது. நான் அங்கு சென்றிருக்க வேண்டும்.

மேஜர் முகுந்தின் வாழ்க்கை வீரம் நிறைந்தது. சிவகார்த்திகேயன் அதனை முழுமையாக்கியுள்ளார். சாய் பல்லவியை போலவே நானும் அழுதேன். எல்லா துறையிலும் சிறப்பாக செயல்பட்டதற்காக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை கொண்டாட வேண்டும். இது எளிதான விஷயமல்ல. இவ்வாறு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

இது போல் இயக்குனர் அஜய் ஞானமுத்துவும் ‘அமரன்’ படத்தை தனது எக்ஸ் தளத்தில் பாராட்டியுள்ளார். முன்னதாக இப்படத்தின் ரிலீசுக்கு முந்தைய நாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. ‘அமரன்’ படம் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருவதுடன், வசூலிலும் சக்கை போடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.