மின்னல் வேகத்தில் பறக்கும் கார்!பந்தயத்துக்கு தக யாராகி வரும் அஜித்குமார்!சமூக வலைத்தளங்களில் பரவி ட்ரெண்டிங் 01!

மின்னல் வேகத்தில் பறக்கும் கார்!பந்தயத்துக்கு தக யாராகி வரும் அஜித்குமார்!சமூக வலைத்தளங்களில் பரவி ட்ரெண்டிங் 01!

நடிகர் அஜித் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பா ஜிடி4 ரக கார் பந்தயத்தில் கலந்து கொள்ளப்போகின்றார் என்ற தகவல் அனைவரும் அறிந்ததே. இதறகாக தனது படங்களின் படப்பிடிப்பின்போது அதாவது, ஒரு கட்ட படப்பிடிப்புக்கும் அடுத்த கட்ட படப்பிடிப்புக்குமான இடைவெளியில் கார் பந்தயத்திற்கு தீவிரமாக தயாராகி வருகின்றார். இப்படி இருக்கும்போது, அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் கார் ரேஸ்க்கு தயாராகி வரும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடிகர் அஜித்குமாருக்கு நடிப்பு எந்த அளவுக்கு விருப்பமோ அதே அளவுக்கு கார் மற்றும் பைக் ரேஸ்கள் மீதும் ஆர்வம் அதிகம். தான் சினிமா வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்னரே ரேஸ் பந்தயங்களில் பங்கேற்றவர் இவர். இதனால் ஏற்பட்ட விபத்துகளினால் இவருக்கு பலமுறை அடிபட்டு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார், தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகின்றார். இதில் விடாமுயற்சி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே குட் பேட் அக்லி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுவதால், குட் பேட் அக்லி அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் அஜித் கார் ரேஸ்க்கும் தயாராகி வருவதால், குட் பேட் அக்லி படத்தின் டப்பிங் பணிகளை பொறுமையாக செய்து கொள்ளலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. துபாயில் உள்ள ஆர்டோம் கார் ரேஸ் மையத்தில் ஃபெராரி 488 இ.வி.ஒ சேலஞ் காரை அஜித் குமார் டெஸ்ட் செய்து கொண்டு இருந்த வீடியோவை சில மாதங்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தார், அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா. அதில் நடைபெறவுள்ள ஐரோப்பிய ரேஸிங் சீசனுக்கு தயாராகி வருகிறார் என தெரிவித்திருந்தார்.

அஜித் கார் ரேஸ்க்கும் தயாராகி வருவதால், குட் பேட் அக்லி படத்தின் டப்பிங் பணிகளை பொறுமையாக செய்து கொள்ளலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. துபாயில் உள்ள ஆர்டோம் கார் ரேஸ் மையத்தில் ஃபெராரி 488 இ.வி.ஒ சேலஞ் காரை அஜித் குமார் டெஸ்ட் செய்து கொண்டு இருந்த வீடியோவை சில மாதங்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தார், அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா. அதில் நடைபெறவுள்ள ஐரோப்பிய ரேஸிங் சீசனுக்கு தயாராகி வருகிறார் என தெரிவித்திருந்தார்.

இந்தத் தகவல் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியது. இதுமட்டும் இல்லாமல், இது தொடர்பாக அவ்வப்போது வீடியோக்களையும் புகைப்படங்களையும் சுரேஷ் சந்திரா பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், அஜித்குமார் கார் ரேஸ்க்காக தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருவது தெரிகின்றது. மேலும் இதில் சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் அஜித்குமார் தனது சக கார் ரேஸ் வீரர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீவிரமாக பரவி வருகின்றது.

அடுத்த ஆண்டு அஜித் கார் பந்தயத்தில் கலந்து கொள்வது, அவரது இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆவது என அஜித் ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட் இருப்பதால் மகிழ்ச்சி மேல் மகிழ்ச்சியான தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, அஜித் ரசிகர்கள் தாங்கள் ஒன்று கூடும் இடங்களில் அஜித்தே.. கடவுளே என முழக்கமிட்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது அஜித்தே கடவுளே என்பது ஒரு ட்ரெண்டாகவே மாறிவிட்டது.சில யூடூயூப் சேனல்களும் இந்த அஜித்தே கடவுளே என்பதை ஒரு தீமாகக் கொண்டு வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றது.

https://www.instagram.com/p/DBs070uS8OP/?utm_source=ig_embed&utm_campaign=loading&img_index=4

Ajithkumar,race,trending,vidamuyarchi