தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவர் விஜய் இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள ‘வி’ சாலையில் பிரம்மாண்டமான முதல் அரசியல் மாநில மாநாட்டை நடத்தினார். இந்த விழாவை வெற்றிக்கொள்கைத் திருவிழான்னு பெயரிடப்பட்டு இருந்தது. விஜய் பேசிய யதார்த்தமான பேச்சு மக்களைக் கவர்ந்து இழுத்தது. லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து இருந்தனர். நிகழ்ச்சியில் விஜய் பேசியவற்றில் இருந்து சில முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.
2026ல் த்வக் ன்னு அவங்க அழுத்தப் போற ஒவ்வொரு ஓட்டும் அணுகுண்டா மாறும். நடக்கும். இங்க ஒரு கூட்டம் கொஞ்ச காலமா ஒரே பாட்டைப் பாடிக்கிட்டு இருக்கு. யார் அரசியலுக்கு வந்தாலும் பூச்சாண்டிக் காட்டிக்கிட்டு ஆனா இவங்க மட்டும் அண்டர்கிரவுண்டுல விளையாடிக்கிட்டு சீனைப் போடுறாங்க. அவங்க பாசிசம் சொன்னா நீங்க என்ன பாயாசமா? மக்கள் விரோத ஆட்சியைத் திராவிட மாடல்னு சொல்லி மக்களை ஏமாத்துறாங்க. இனி என்ன தான் மோடி மஸ்தான் வேலையை செஞ்சாலும் ஒண்ணும் நடக்காது.
திராவிடமும், தேசியமும் இந்த மண்ணோட இரு கண்கள். மாற்றுச் சக்தின்னு சொல்லிக்கிட்டு நான் அரசியலுக்கு வரப்போறதுமில்லை. என் கூட பிறந்த தங்கை திவ்யா இறந்தது எனக்குப் பாதிப்பு. அதே பாதிப்பு தான் தங்கை அனிதாவின் மரணம். இனிமே கவலைப்படாதீங்க. உங்க விஜய் களத்துக்கு வந்துட்டான். என்னைப் பார்க்குற குட்டீஸ்ல இருந்து பாட்டீஸ் வரைக்கும் பிடிக்கிற ஆளா தான் இருப்பேன். குட்டிஸ்டோரி. ஒரு நாட்டுல பெரிய போர். அது பச்சைப்புள்ளைக் கையில தான் பொறுப்பு. நாட்டுல போர்க்களத்துக்குப் போகலாம்னு சொல்றான் அந்தப் பையன். அதுக்கு போர் எல்லாம் உனக்கு முடியாது. அது பெரிய விஷயம். எப்படி ஜெயிப்பன்னு பெரியவங்க எல்லாம் பயமுறுத்துனாங்க. ஆனா எந்தப் பயமும் இல்லாம போருக்குப் படைபலத்துடன் போனான். சங்க இலக்கியத்துல சொல்வாங்க. ஆனா கெட்ட பய சார் அந்த சின்னப் பையன். பாண்டிய வம்சத்துல பிறந்தவன் தான் அவன். தெரியாதவங்க சங்க இலக்கியங்களைப் படிச்சித் தெரிஞ்சிக்கோங்க. இவ்வாறு அவர் பேசினார்.
vijay ,political ,speach.