உலகில் எந்த ஒரு நாட்டில் போர் நடந்தாலும், அங்கே உள்ள செல்வந்தர்கள் உடனே குடும்பத்தோடு கிளம்பி இலங்கை சென்று விடுகிறார்கள். காரணம் வெளிநாட்டுக் காசை மாற்றினால், இலங்கையில் கத்தை கத்தையாக பணத்தை தருகிறார்கள். மேலும் சொல்லப் போனால் நிம்மதியாக இருக்கலாம். கால வரையறையற்ற விசா கிடைக்கிறது.
இதுபோல இஸ்ரேல் பாலஸ்தீன போர் ஆரம்பமாகிய சில தினங்களில், பல நூறு இஸ்ரேலியர்கள் புறப்பட்டு குடும்பத்தோடு இலங்கை சென்றுவிட்டார்கள். இது நாளுக்கு நாள் அதிகமாகி தற்போது 20,000 ஆயிரம் இஸ்ரேலியர்கள் இலங்கையில் தங்கியுள்ளார்கள். இது இலங்கை குடி வரவு திணைக்களத்தின் தகவல். அவர்களில் 90% சத விகிதமானவர்கள், அறுகம்பை கடல்கரை ஓரமாக தங்கியுள்ளார்கள்.
அங்கே யூதர்களுக்கான ஆலயங்கள் கூட கட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கு இஸ்ரேலில் இருந்து உறவினர்கள் பணத்தை அனுப்பி வருகிறார்கள். இதனை கண்டு பிடித்த முஸ்லீம் தீவிரவாதிகள், இலங்கையில் அறுகம்பையில், இவர்கள் மீது பாரிய தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இதனை ஊடறுத்து , தகவலை அறிந்துகொண்ட அமெரிக்க சி.ஐ.ஏ, கடந்த முறை போல, இலங்கை அரசுக்கு இந்த விடையத்தை சொல்லவில்லை.
நமக்கு எல்லாம், இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதல் நினைவில் இருக்கும். ஈஸ்டர் தாக்குதல் நடக்கப் போகிறது என்று , அமெரிக்கா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இலங்கை அரசு அதனை காதில் வாங்கவில்லை. அது போல இதுவும் ஆகி விடும் என்ப்தனால், அமெரிக்கா மும் முறை, தனது நாட்டு மக்களை அறுகம்பைக்குச் செல்லவேண்டாம் என்று வெளிப்படையாக அறிவித்தது. இதனை அடுத்து இஸ்ரேல் தனது நாட்டுப் பிரஜைகளை இலங்கையில் இருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளது.
நிலமையை புரிந்துகொண்ட இலங்கை புலனாய்வுப் பிரிவு, அமெரிக்க சி.ஐ.ஏ உதவியோடு சற்று முன்னர் 3 பேரைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தியாவில் இருந்து குண்டைத் தயாரித்து இலங்கைக்கு உள்ளே கொண்டுவர முஸ்லீம் திவிரவாதிகள் திட்டம் தீட்டி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.