தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் ஹ்ர்தயம் மற்றும் மாநாடு படங்களில் நடித்ததன் முலம் நன்கு புகழ் பெற்றார். வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சின்னத்திரை நடிகரைத் திருமணம் செய்துகொண்டதாக தகவல்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக இந்தத் தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கூறியதைப் போல, தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வர கல்யாணி பிரியதர்ஷன் சிறப்பான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகின்றார். இவர் இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசியின் மகள் ஆவார். பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய கல்யாணி பிரியதர்ஷனுக்கு நடிப்பின் மீதும் தீராத மோகம் இருந்ததால், ஹலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
கல்யாணி பிரியதர்ஷனின் பெற்றோர்கள் என்னதான் மலையாள சினிமாவின் ஸ்டார்களாக இருந்தாலும் வேற்று மொழிகளில் நான்கு படங்களில் நடித்த பின்னரே மலையாளத்தில் கால் பதித்தார் கல்யாணி. வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவருக்கும் சின்னத்திரை நடிகர் ஸ்ரீராமுக்கும் ரகசியமாக திருமணமாகிவிட்டது என்ற தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இந்தத் தகவலை உறுதி செய்யும் வகையில் வீடியோவும் இணையத்தில் பரவி வருகின்றது.