Rs. 3,000 monthly allowance for pensioners from next week
அடுத்த வாரம் முதல்.. முதல் ஓய்வூதியத்தில் இருக்கும் முதியவர்களுக்கு, மேலதிகமாக 3,000 ரூபாபை மாதம் தோறும் வழங்குமாறு ஜனாதிபதி அனுரா கட்டளையிட்டுள்ளார். நவம்பர் 14ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, பல சலுகைகளை அனுரா அறிவித்து வருகிறார். இதன் பின்னால் மக்களை தன் வசம் திருப்பும் திட்டமே உள்ளது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது.
இருப்பினும் இந்த 3,000ரூபா உதவித் தொகையானது, தற்காலிகமானது என்றும் கூறப்படுகிறது. இது இவ்வாறு இருக்க, இலங்கையின் திறைசேரியில் பணம் இருக்கிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அத்துடன் உலக வங்கி பல கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. இதனை அனுராவின் அரசு ஏற்க்குமா என்பது தெரியவில்லை.
இடது சாரிக் கொள்கையோடு நாட்டில் ஆட்சியை அமைத்து, மேற்கு உலகத்துடன் இணைந்து செல்லாத ஒரு பாதையை அனுரா கையாள்வார் என்று எதிர்பார்கப்படுகிறது. இதனால் இலங்கை மேலும் அதள பாதாளம் நோக்கிச் செல்ல வாய்ப்புகள் இருப்பதாக், ஆசிய ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.