ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. ஞானவேல் கிளாஸாகவும் மாஸாகவும் ஒரு படத்தை கொடுத்துவிட்டார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தனுஷ் முதல் விஜய்வரை பல செலிபிரிட்டிகள் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தார்கள். அந்தவகையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் படம் பார்த்தார். அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ரஜினியை புகழ்ந்தார்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கிறது வேட்டையன் திரைப்படம். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா, ரித்திகா சிங், விருமாண்டி அபிராமி, துஷாரா விஜயன் என பலர் நடித்திருக்கிறார்கள். முதன்முறையாக் ரஜினிகாந்த் ஞானவேலுவுடன் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதுதான் இப்போது தமிழ் திரைத்துறையின் ஒட்டுமொத்த பார்வையும் இருந்தது. லைகா நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது.
வேட்டையன் படத்துக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ரஜினிக்காக மாஸ் காட்சிகளும், தனது ஸ்டைலில் சமூக நோக்கத்துடன் கூடிய க்ளாஸ் காட்சிகளையும் ஞானவேல் வைத்திருக்கிறார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி படத்தில் அனிருத்தின் இசை பட்டையை கிளப்புவதாகவும்; தன் மீது வந்த விமர்சனத்துக்கெல்லாம் அவர் இதில் பதிலடி கொடுத்துவிட்டார் என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.
கார்த்திக் சுப்புராஜ் பேட்டி: இந்நிலையில் ரஜினிகாந்த்தின் வெறித்தனமான ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் வேட்டையன் படத்தை திரையரங்கில் சென்று பார்த்தார். அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தலைவர் படம் என்பதால் நான் ரொம்பவே ஆர்வமாக இருந்தேன். நான் அவரை வைத்து இயக்கிய பேட்ட படத்துக்கு பிறகு அவரது நடிப்பில் நிறைய நல்ல படங்கள் வந்திருக்கின்றன. ஜெயிலர் படம் நன்றாக இருந்தது. தலைவர் ரஜினி குறி வெச்சா தப்பாது” என்றார்.
அடுத்த படம்?: இதற்கிடையே பேட்ட படத்தை ரஜினியை வைத்து இயக்கியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. இப்போது அவர் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அநேகமாக ரஜினிகாந்த்தும், கார்த்திக் சுப்புராஜும் மீண்டும் ஒருமுறை இணைந்து படம் செய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அது நடந்தால் பேட்ட படத்தைவிடவும் மாஸாக இருக்கும் என்று ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.