லைக்கா நிறுவனத்தின் தலைவர், திரு சுபாஷ்கரன் அல்லிராஜா அவர்கள் அனுராவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதனை தான் உடனே பரிசீலனை செய்வதாக, அனுரா கூறியுள்ளார். முன்னர் ரணில் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில், அவருடன் திரு சுபாஷ்கரன் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பல தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து தற்போது, எஞ்சியுள்ள அனைத்து தமிழ் கைதிகளையும், உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சுபாஷ்கரன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட அனுரா, உடனடியாக அவனசெய்வதாக சுபாஷ்கரனிடம் கூறியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் திரு சுபாஷ்கரன் அவர்கள், நீண்ட நாட்களாக அக்கறை செலுத்தி வருகிறார். மேலும் , தமிழர் தாயகப் பகுதிகளில் சுபாஷ்கரன் அவர்களது, தொண்டு நிறுவனமான, ஞானம் அறக்கட்டளை, பல உதவித் திட்டங்களை மேற்கொண்டு வருவதோடு, தமிழ்ப் பகுதிகளின் முன்னேற்றத்திலும் ஞானம் அறக்கட்டளை முழுக் கவனத்தையும் செலுத்தி வருவதும் குறிப்பிடத் தக்கவிடையம் ஆகும்.