இலங்கை வரலாற்றில் 2வது தடவை வாக்கை எண்ணி ஜனாதிபதியை அறிவிப்பது இதுவே முதல் தடவை

இலங்கை வரலாற்றில் 2வது தடவை வாக்கை எண்ணி ஜனாதிபதியை அறிவிப்பது இதுவே முதல் தடவை

தற்போது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் முடிவுகளின் படி, அனுரா இலங்கையின் ஜனாதிபதி என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

 

இலங்கை வரலாற்றில், 2வது தடவை வாக்கை,  எண்ணி, ஜனாதிபதியை அறிவிக்கவேண்டிய நிலை முதன் முறையாக ஏற்பட்டுள்ளது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல சஜித் மற்றும் அனுரா ஆகிய இருவருமே 50% சத விகித வாக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. ஆனால் சஜித்தின் மொத்த வாக்கு எண்ணிக்கையைப் பார்த்தால், அனுரா சஜித்தை விட சுமார் 13-லட்சம் வாக்குகளை அதிகம் பெற்று இருக்கிறார்.

இதனால் விருப்பு வாக்கை எண்ணும் போது, சில லட்சம் விருப்பு வாக்குகளை எண்ணி முடிக்கும் தருவாயில், அனுரா 50% விகிதத்தை எட்டிவிடுவார் என்று கூறப்படுகிறது. இலங்கை நேரப்படி இரவு 9 மணி அல்லது 10 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என்றும். நாளை திங்கட்கிழமை அனுரா ஜனாதிபதியாக பொறுப்பை ஏற்ப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து சட்டமா அதிபரிடம் ரணில் தனது ராஜினாமா கடித்ததை கையளிக்கவேண்டும். தற்போது ரணில் ஒரு அரசியல் அநாதை ஆக்கப்பட்டுள்ளார். அவரிடம் UNP கட்சியும் இல்லை.

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சஜித் தோல்வியடைந்தாலும் அவரே எதிர்கட்சித் தலைவராக இருக்கப் போகிறார். ஆனால் பாராளுமன்றத் தேர்தல் சற்று வித்தியாசமாக இருக்கும். அனுரா பதவி ஏற்றும் 46 நாட்களில் பாராளுமன்றத்தை கலைக்க முடியும். அனுரா பதவி ஏற்ற சில நாட்களில், ஊழல் தலைவர்கள் சிலரைப் பிடித்து சிறையில் அடைத்தாலே போதும், மக்கள் மேலும் அனுராவின் பக்கம் சாய்ந்து விடுவார்கள். எனவே அனுரா முதலில் ராஜபக்ஷ குடும்பத்தின் மீது கை வைக்க கூடும் என்று எதிர்பார்கப்படுகிறது. ஏதாவது ஒரு தடாலடி சம்பவம் ஒன்றை அனுரா,  நிகழ்த்தினால் தான் அது பாராளுமன்ற தேர்தலுக்கு, அவருக்கு உதவியாக இருக்கும்.

எனவே சில தடாலடி சம்பவங்களை நாம் இன்னும் சில நாட்களில் எதிர்பார்கலாம். தற்போது கருணா அம்மானுக்கு, டக்கி மாமாவுக்கு, என்று பலருக்கு வயிற்றில் புழியைக் கரைப்பது போல இருக்கும். இதில் சிலர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவும் கூடும்.