பிள்ளையையும் ஆட்டி தொட்டிலையும் கிள்ளி விடுவது என்று கூறுவார்களே, அதனைத் தான் தற்போது இந்தியா செய்து வருகிறது. கடந்த வாரம் தான் பல ஆட்டிலறி எறி கணைகளையும் , ஏவு தளங்களையும் உக்ரைனுக்கு விற்றது இந்தியா. இதனால் ரஷ்யா பெரும் அதிருப்த்தியில் இருந்தது. தற்போது இந்தியாவால் தயாரிக்கப்படும் T72 ரக கவச வாகங்களை ரஷ்யாவுக்கு விற்க்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இது நாள் வரை இந்தியா தயாரித்த கவச வாகனங்களில், T72 உலகப் புகழ்பெற்றவை. அவற்றின் தாக்குதல் திறன் அதிகம். ஆனால் தற்போது இந்த T72 கவச வாகனங்களை தரம் உயர்த்தியுள்ளது இந்தியா. இதில் பல இலத்திரனியல் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் T72 கவச வாகனங்களை வாங்க பல உலக நாடுகள் முண்டியடிக்கிறார்கள். இன் நிலையில் 2,500 வாகனங்களை ரஷ்யாவுக்கு விற்பது என்று இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
உலகச் சந்தையில் ஒப்பிடும் போது, T72 கவச வாகனங்கள் சற்று மலிவாகக் கிடைக்கிறது. ஆனால் நல்ல தரமான கவச வாகனமாகவும் இருக்கிறது. இதனால் பல உலக நாடுகள், ஆர்வம் காட்டி வருகிறது.