Ammunition from India enters Ukraine, raising Russian ire
உலகில் பல நாடுகள் உக்ரைனுக்கு இலவச ஆயுதங்களை வழங்கி வரும் நிலையில். இந்தியா தனது ஆட்டிலறி எறிகணைகளை உக்ரைனுக்கு விற்றுள்ளது. இதனை விட இந்திய விமானம் மூலம் அவை அனைத்தும் உக்ரைன் சென்றடைந்துள்ள விடையம், ரஷ்யாவை மேலும் கடுப்பேத்தியுள்ளது. இந்தியாவிடம் இருந்து ஆட்டிலறி எறிகணைகள், மற்றும் ஆட்டிலறி ஏவு தளங்களை உக்ரைன் ஆடர் செய்து இருந்தது.
இதனை இந்திய ராணுவ தளபாட உற்பத்தி நிறுவனம் ஒன்று, ஏற்றுக்கொண்டது. ஆனால் ரஷ்யா தொடர்ந்தும் இந்த விற்பனையை மேற்கொள்ள வேண்டாம் என்று தனது எதிர்ப்பை புது டெல்லிக்கு தெரிவித்து வந்த நிலையில். புது டெல்லி இது தொடர்பாக எந்த ஒரு அட்டையும் செய்யவில்லை. மாறாக உக்ரைன் கேட்ட ஆயுதங்களை தயாரித்து. அதனை தாமே டிலிவரியும் செய்துள்ளார்கள்.
நேற்றைய தினம்(புதன்) இந்த ஆயுதங்கள் உக்ரைன் தலைநகர் கிவ் வுக்குச் சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து ரஷ்யா கண்டனம் வெளியிட்டுள்ளது.