இன்று (18) அதிகாலை லெபனானில் உள்ள பல இடங்களில் சிறிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. சுமார் 2,500 பேர் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். இதில் சிறுவர் சிறுமிகளும் அடங்கும். மோபைல் போன் வருவதற்கு முன்னர் பாவிக்கப்பட்ட ஒரு சிறிய சாதனம் தான் பேஜர்() . இதில் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த முடியாது. ஆனால் அதில் செய்திகள் வந்து விழும்.
மோபைல் போனை பாவித்தால் இஸ்ரேல் அதனை டிராக் செய்கிறது என்ற காரணத்தால், பாவனையில் இல்லாத பேஜர்களை, தைவான் நாட்டில் மீண்டும் உற்பத்தி செய்ய ஹிஸ்புல்லா இயக்கம் ஒரு கம்பெனியை நாடி உள்ளது. 5000 பேஜர்களை செய்து தரும்படி ஹிஸ்புல்லா இயக்கம் ஆடர் ஒன்றைக் கொடுத்துள்ளது. இதனை உளவுத் துறை மூலம் அறிந்த இஸ்ரேல், குறித்த பேஜர்களை செய்யும் போது அதனுள் அதி சக்த்தி வாய்ந்த வெடி மருந்தையும் வைத்துள்ளார்கள்.
பின்னர் அதனை லெபனானுக்கு அந்தக் கம்பெனி அனுப்புவது போலவே , அனுப்பி வைத்துள்ளார்கள். இதனைப் பெற்றுக் கொண்ட- ஹிஸ்புல்லா இயக்கம், தனது 5,000 போராளிகளுக்கும் இதனைக் கொடுத்துள்ளார்கள். இன்று அதிகாலை வரை இந்தப் பேஜர் சர்வ சாதாரணமாக வேலை செய்து கொண்டு இருந்துள்ளது. ஆனால் அதிகாலை இஸ்ரேல் மொசாட் படை ஒரு வித்தியாசமான சிக்னலை அனுப்பி உள்ளது.
இதனை அடுத்து குறித்த 5,000 பேஜர்களும் ஒரே நடையில் வெடித்துள்ளது. பொதுவாக பேஜரை இடுப்பு பெலிட்டில் வைத்திருப்பது, வழக்கம். இதனால் அது வெடித்தால் பலர் இறந்துள்ளார்கள். இதில் குழந்தைகளும் அடங்கும். இந்தச் செயல் உலக நாடுகளின் பலத்த கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. இஸ்ரேல் இது போன்ற கிழ் தரமான செயல்களில் ஈடுபட்டு, முன் உதாரணமாக மாறியுள்ளது. இதனை சீனா போன்ற நாடுகள் பின் பற்றினால், அமெரிக்க செனட்டரை கூட போட்டுத் தள்ள முடியும். இஸ்ரேலின் இந்த ஈனச் செயல், ஒரு இனப்படுகொலைக்குச் சமன். இதுவரை 2,500 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.