வரும் செவ்வாய்க் கிழமை, முன்னாள் ஜனாதிபதி ரம் மற்றும் கமலா ஹரிஸ் ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து TV முன்பாக (நேரலையில்) விவாதிக்க உள்ளார்கள். இதனை அமெரிக்க மக்கள் மட்டுமல்ல் உலகளாவிய ரீதியில், பல மில்லியன் மக்கள் பார்க்க உள்ளார்கள். ஆனால் ரம்பின் கட்சியினர் பெரும் கவலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காரணம் ரம்பால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது. கமலா ஹரிஸ் அவரை சற்று சீண்டி விட்டால் போதும். அவர் உடனே உளற ஆரம்பித்துவிடுவார்.
கட்டுப்பாட்டை இழந்து பேசக் கூடாத விடையங்களை பேசி விடுவார். இது யானை தன் தலையில் மண்ணை போடுவது போல இருக்கும். இதனால் ரிப்-பப்பிளிக்கன் கட்சியின் மிக முக்கிய நபர்கள், ரம்பை மீண்டும் மீண்டும் சந்தித்து அமைதியாகப் பேசுங்கள் என்று , பொறுமையாக இருங்கள் என்று அறிவுரை கூறிவருகிறார்கள். ஆனால் அப்படி அறிவுரை சொல்லச் சென்ற மிக முக்கிய கட்சி உறுப்பினர் ஒருவர் மீதே ரம் சீறிப் பாய்ந்துள்ளார். இதனை அடுத்து குறித்த அரசியல் பிரமுகர், ரம் ஒரு பரிசோதனைக் கூட எலி போல உள்ளார் என்றும், ஊசி போட்டால் எலி எப்படி நடுங்குமோ அப்படி நடுங்கி உளறப் போகிறார் என்றும் எதிர்வு கூறியுள்ளார்.
இந்த சந்தர்பத்தை கமலா ஹரிஸ் நன்றாகப் பயன்படுத்தினால், அமெரிக்க மக்கள் மனதை வெல்ல முடியும். அடுத்த ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு கமலா ஹரிசுக்கே அதிகம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.