பிணமாக நடித்திருக்கும் பிரபுதேவா.. “ஜாலியோ ஜிம்கானா” ட்ரெய்லர்

பிணமாக நடித்திருக்கும் பிரபுதேவா.. “ஜாலியோ ஜிம்கானா”  ட்ரெய்லர்

பிரபல டான்ஸ் மாஸ்டரான பிரபு தேவா நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குனராக இருந்து வருகிறார். இவர் நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகனாவார். வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் “இந்தியாவின் மைக்கல் ஜாக்சன்” என்று பிரபலமாக அறியப் படுகின்றார்.

பிரபுதேவாவின் முதலாவது நடனம் வெற்றிவிழாத் திரைப்படத்தில் தான் ஆரம்பித்தது. இவர் இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார். “மின்சார கனவு” திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

அக்னி நட்சத்திரம், இதயம் உள்ளிட்ட படங்களுக்கு நடனமாடி வந்த பிரபு தேவா ஷங்கரின் இயக்கத்தில் உருவான “காதலன்” திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்தார். இந்நிலையில் தற்போது பிரபுதேவாவின் “ஜாலியோ ஜிம்கானா” ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. இதில் படம் முழுக்க பிரபுதேவா பிணமாக தான் வருகிறார். பிணத்தை தூக்கிக்கொண்டு சுத்தும் நான்கு பெண்கள் தான் படத்தின் கதை.
இதோ ட்ரைலர் வீடியோ: https://www.youtube.com/watch?v=WMxcJFRnGrw

Jolly O Gymkhana – Official Movie Trailer

Jolly O Gymkhana, Prabhu Deva, Madonna Sebastian, Abirami, Yogi Babu, பிரபுதேவா, “ஜாலியோ ஜிம்கானா