வௌவாலுக்கு வாழ்கைப் பட்டா தலை கீழா தொங்கித் தான் ஆகவேண்டும். அது போல இந்த உலகத் தமிழர் பேரவையோடு சேர்ந்து தனது தலையில் தானே மன்னைத் தூவியுள்ளது CTC என்று அழைக்கப்படும் கனேடிய தமிழர் காங்கிரஸ் அமைப்பு. இமாலயப் பிரகடனம் , தமிழர் சிங்களவர் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று ஒரு கோட்பாட்டை இலங்கைக்கு கொண்டு போய், புத்த பிக்குகள் காலடியில் அதனை வைத்து தொட்டுக் கும்பிட்டார்கள், இந்த அமைப்பில் உள்ளவர்கள்.
ஏற்கனவே லண்டனில் உலகத் தமிழர் பேரவை மற்றும், பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற அமைப்புகள் மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில். உலகத் தமிழர் பேரவை, இந்தியா தயாரித்து வழங்கிய தீர்வுத் திட்டம் ஒன்றை கொண்டு போய், புத்த பிக்குகளின் காலடியில் வைத்தார்கள். இதில் கனடாவில் இயங்கி வரும் CTC அமைப்பும் இணைந்து கொண்டது. இதனை அடுத்து கனேடியத் தமிழர்கள், கொதித்துப் போய் உள்ளார்கள்.
சமீபத்தில் இந்த அமைப்பு நடத்திய இசை நிகழ்ச்சி, பெரும் குழப்பத்தில் முடிவடைந்துள்ளது. தென்னிந்தியப் பாடகர் ஸ்ரீனிவாசை அழைத்து CTC நடத்திய நிகழ்வில் ஸ்ரீனிவாஸ் மீது முட்டை அடித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள் கனேடிய தமிழர்கள். கீழே வீடியோ இணைப்பு.