ரஷ்ய கப்பலை தாக்கி அழித்த உக்ரைன் படைகள்- அதில் பெருமளவான ஆயுதங்கள் இருந்துள்ளது !

ரஷ்ய கப்பலை தாக்கி அழித்த உக்ரைன் படைகள்- அதில் பெருமளவான ஆயுதங்கள் இருந்துள்ளது !

The Ukrainian Navy has sunk a ferry in the Russian port of Kavkaz. On board that Russian ferry were weapons and fuel. So reports army spokesman Dmytro Pletenchuk in an interview with Radio Liberty. The ferry was called “Conro Trader” and was heavily used by the Russians to resupply their troops. More details about the attack and any wounded were not yet shared. A photo of the attack can already be seen on social media. (in Tamil)

ரஷ்யாவில் உள்ள Kavkaz என்னும் துறை முகத்தில் பயணிகள் கப்பல் ஒன்று தரித்து நின்றுள்ளது. இந்தப் பயணிகள் கப்பலில் எந்த உல்லாசப் பயணிகளும் இல்லை. மாறாக ராணுவத்தினரே நிலை கொண்டு இருந்துள்ளார்கள். குறித்த கப்பலில் பெருமளவான ஆயுதங்கள் மற்றும் எரி பொருட்கள் இருந்துள்ளது. இதனை எப்படியோ மோப்பம் பிடித்த, உக்ரைன் கடல் படை. சிறிய ரக தாக்குதல் படகு ஒன்றில் சென்று,

ரஷ்ய கடல் எல்லையில் வைத்தே இந்தக் கப்பலை தாக்கி அழித்துள்ளார்கள். வெடித்துச் சிதறிய இந்தக் கப்பல் சற்று நேரத்தில் தண்ணீரில் மூழ்கிவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் கடல் படை ராடர் கண்களில் மண்ணைத் தூவி, எவ்வாறு இந்த தாக்குதல் நடந்தது என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. நேட்டோ நாடுகளின் கண்களில், இருந்து தப்பிக்க ஏதுவாக ரஷ்யா தனது ஆயுதங்களை இது போல பயணிகள் கப்பலில் இடம் மாற்றுவது வழக்கம்.

ஆனால் இம்முறை அது பலிக்கவில்லை. உண்மையைச் சொல்லப் போனால் உக்ரைனிடம் தற்போது பலமான ஒரு உளவுப்படை உள்ளது. ரஷ்யாவில் இருந்து அவர்களுக்கு பல தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளது. இதனை வைத்தே இவர்கள் துல்லியமாக ரஷ்யா மீது தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.

Source : Read English version