துரும்பா இளைத்து போன ரோபோ சங்கரா இது…? முரட்டு உடம்பு காட்டி மிரட்டுறாரே!

துரும்பா இளைத்து போன ரோபோ சங்கரா இது…? முரட்டு உடம்பு காட்டி மிரட்டுறாரே!

மேடை சிரிப்புரை அறிஞராக தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர்தான் ரோபோ சங்கர். குறிப்பாக இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானார். இவரது டைமிங் காமெடி எல்லோரது கவனத்தை ஈர்த்தபோது விரைவிலே பிரபலமாகிவிட்டார்.

விஜய் தொலைக்காட்சியின் சொத்து என சொல்லக்கூடிய அளவுக்கு ரோபோ சங்கர் அந்த டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் தொகுப்பாளராகவும் இருந்து வந்திருக்கிறார். இதனிடையே இவர் தமிழ் திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை குணசேத்திர வருடங்களிலும் காமெடி கதா காத்திரங்களிலும் நடித்தும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இவரது திரைப்பயணம் தீபாவளி திரைப்படத்தில் ஆரம்பித்தது. தொடர்ந்து ரௌத்திரம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யாருடா மகேஷ், வாயை மூடி பேசவும், மாரி, புலி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் மிக முக்கியமான கவனத்தை ஈர்க்கும் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் ரோபோ சங்கரின் நடிப்பு வேற லெவலில் இருந்தது.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர் ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் எடை மிகவும் மெலிந்து போய் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு துரும்பென இளைத்து போய் கிடந்தார். அப்படி இருந்த ரோபோ சங்கர் தற்போது திடீரென தனது உடல் எடை கூடி பருமனான தோற்றத்தில் மிரட்டலாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியிட்டு அட இவ்வளவு மாற்றமா அதுக்குள்ள? என ரசிகர்கள் ஷாக் ஆகி கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

robo shankar daughter, இந்திரஜா ரோபோ ஷங்கர், Cinema news , kollywood news ,