இந்திய சினிமாவில் பிரபல நடிகையான பிரியா ஆனந்த்தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக இவர் நடித்த வருகிறார் . இவர் தெலுங்கில் வெளியான லீடர் திரைப்படத்தின் மூலமாக தெளித்துறையில் அறிமுகமாகி தமிழில் வாமனன் திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார் . தொடர்ச்சியாக ஹிந்தி தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் அடுத்தடுத்த படங்களில் நடித்த பிரபலமான நடிகை என்ற இடத்தை பிடித்தார்.
எதிர்நீச்சல் , வணக்கம் சென்னை , வை ராஜா வை , அரிமா நம்பி, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற படங்களாக பார்க்கப்பட்டது.பிரியா ஆனந்த் தற்போது பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “அந்தகன்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படம் பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்தது. அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இப்படத்தின் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பிரியா ஆனந்த் மற்றும் பட குழு பங்கேற்றிருந்தனர்.
அப்போது பிரியா ஆனந்த்…பெசன்ட் ரவி இரண்டு நாட்களுக்கு முன் ஜிம் ஒர்க்கவுட் சொல்லி கொடுத்ததில் இப்போது வரை இடுப்பு வலிக்கிறது என்று கூறினார். இதற்கு பத்திரிக்கையாளர் ஒருவர், பிரியா ஆனந்த்க்கு இடுப்பு வலி எடுத்ததை போல் பிரசாந்த் சார் உங்களுக்கு அப்படி இடுப்பு வலி வந்ததா என்று கேட்டதும், சில சமயத்தில் ஏன் தமிழ் தெரிந்தது என்று தோன்றுகிறது என்று பிரியா ஆனந்த் புலம்பி இருக்கிறார்.
இதனை கேட்ட தியாகராஜன், பொம்பளைங்க உடற்பயிற்சி செய்யும் போது இடுப்பு வலி வரும், ஆண்கள் செய்தால் வராது, உடல் வலி தான் இருக்குமே தவிர வேறு எந்த வலியும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
பின் பெசன்ட் ரவி, பத்திரிக்கையாளரை பார்த்து, நீங்களும் வாங்க ஜிம் ஒர்க்கவுட் செய்யலாம் என்றும் எந்த நேரத்தில் என்ன கேள்வி கேட்கிறீர்கள் என்று கூறி பதிலடி கொடுத்திருக்கிறார். இதோ அந்த வீடியோ:
பிரியா ஆனந்த், Priya anand, viral video , cinema news , Kollywood news