இது நாள் வரை ரஷ்யா தான் உக்ரைனுக்கு உள்ளே ஊடுருவி நகரங்களை கைப்பற்றி வந்தது. ஆனால் முதல் தடவையாக உக்ரைன் ரஷ்யாவுக்கு உள்ளே ஊடுருவி “கோஷ்” என்னும் நகரத்தை கைப்பற்றியுள்ள நிலையில். வேறு வழியே இன்றி அங்கே இருந்த 76,000 பொதுமக்களையும் அருகில் உள்ள கிராமத்திற்கு செல்லுமாறு ரஷ்ய ராணுவம் கட்டளையிட்டது. இன் நிலையில் கேஷ் நகரில் இருந்து வெறும் 20 மைல் தொலைவில், ரஷ்யாவின் அணு உலை மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது.
இதனை உக்ரைன் படைகள் கைப்பற்றினால், ரஷ்யாவுக்கு விழுந்த பேரிடியாக இது இருக்கும். காரணம் அந்தப் பகுதியில் பின்னர் சண்டையிடுவது என்பது இயலாத காரியம். ஏன் எனில் உக்ரைன் படைகள் அதனை வெடிக்க வைத்து விட்டு, ரஷ்ய தாக்குதலில் தான் அது வெடித்தது என்று கூறலாம். இல்லையே அது உண்மையில் நடக்கலாம். ரஷ்யா உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியான கிரீமியாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. பின்னர் போர் ஆரம்பித்தவேளை, சில எல்லை நகரங்களையும் கைப்பற்றியது.
இதனால் அந்தப் பகுதிகளை தக்க வைக்க பெரும் ராணுவத்தை அங்கே நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் கேஷ் போன்ற நகரங்களில் ராணுவம் இல்லை. இதனால் சரியான வீக் பாயிண்டை பாவித்து உக்ரைன் தற்போது ரஷ்யாவுக்கு உள்ளே ஊடுருவியுள்ளது. இதனால் வேறு இடத்தில் இருந்து ரஷ்ய ராணுவத்தை இங்கே நகர்த்தவேண்டி உள்ளது. அப்படி நகர்த்தினால் , உக்ரைன் அந்த இடத்தை தாக்க ஆரம்பிக்கும். அட ஏனடா நாசமா போன இந்தப் போரை ஆரம்பித்தோம் என்று, புட்டின் ஒவ்வொரு செக்கனும் நினைக்கும் அளவுக்கு , நிலமை மோசமாகிவிட்டது. போதாக் குறைக்கு..
அமெரிக்க , பிரிட்டன் , ஜேர்மனி, பிரான்ஸ், போலந்து , நெதர்லாந்து என்று உலகின் வல்லரசுகள் அனைத்து அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி இருக்கிறது. தற்போதைய சூழ் நிலையில் இஸ்ரேலிடன் உள்ள அயன் டோம் போன்ற வான் பாதுகாப்பு கட்டமைப்பு ஒன்று உக்ரைனிடம் உள்ளது. ரஷ்ய விமானங்கள் உக்ரைன் வான் பரப்பில் தற்போது பறப்பது இல்லை. இன் நிலையில் F16 ரக அதி நவீன போர் விமானங்கள் 6ஐ அமெரிக்கா நெதர்லாந்து ஊடாக வழங்கியுள்ள நிலையில். உக்ரைன் தனது தாக்குதல் வேகத்தை பன் மடங்காக அதிகரித்துள்ளது. இது மேற்கு உலகிற்க்கும் நேட்டோ நாடுகளுக்கும் கிடைத்த ஒரு வெற்றி தான். காரணம் …
ரஷ்யா பலம் இழந்துள்ளது. தற்போதைய உலக சூழலில், எந்த ஒரு நாடாவது போரில் இறங்கினால் 20 வருடங்கள் பின்னுக்கு தள்ளப்படும் அபாயம் தான் உள்ளது. அந்தப் பின்னடைவைத் தான் ரஷ்யா சந்தித்துள்ளது. ஆனால் உக்ரைனை பொறுத்தவரை அவர்கள் பாவிக்கும் ஆயுதங்கள் அவர்களது ஆயுதங்கள் இல்லை. இலவசமாக கிடைத்த ஆயுதங்கள். இதனால் உக்ரைனுக்கு இழப்புகள் என்று ஒன்றும் பெரிதாக இல்லை.