பல Audition’களில் நிராகரிப்பு… இன்று கோடியில் சம்பளம் – நடிகையின் Flashback சம்பவம்!

பல Audition’களில் நிராகரிப்பு… இன்று கோடியில் சம்பளம் – நடிகையின் Flashback சம்பவம்!

நேஷ்னல் கிரஷ் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் ராஷ்மிகா மந்தனா இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இவர் தமிழ் , தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

க்ரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமாகி தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வந்தார் இதனிடையே தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா நட்சத்திர நடிகையாக ஜொலிக்க ஆரம்பித்தார்.

பின்னர் நேஷ்னல் கிரஷ் என்ற பட்டத்தை பெற்றதும் இந்தி சினிமாவில் இருந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க பிரபல நடிகரான ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரது விமர்சனத்திற்கும் உள்ளாகினார்.

இந்த திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும். வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் சினிமாவில் நுழைந்த நேரத்தில் பல அவமானங்களை சந்தித்ததை பற்றி கூறியுள்ளார். அதாவது, நான் 20 முதல் 25 ஆடிஷன்களில் கலந்து கொண்டேன். ஆனால் நான் பார்ப்பதற்கு நடிகை போல் தெரியவில்லை என கூறி நிராகரித்து விட்டனர். இப்படி பல நிராகரிப்புகளையும், அவமானங்களையும் கடந்து தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக இருக்கிறேன் என்றார்.

ராஷ்மிகா மந்தனா , cinema news , Kollywood news , rashmika mandanna, rashmika mandanna news