மகன்களுடன் மகிழ்ச்சியாக நயன்தாரா… லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு குவியும் லைக்ஸ்!

மகன்களுடன் மகிழ்ச்சியாக நயன்தாரா… லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு  குவியும் லைக்ஸ்!

“ஐயா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தமிழ் தமிழை தாண்டி தற்போது ஹிந்தி திரைப்படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

ஜவான் திரைப்படத்தில் அவர் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற நடிகர் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து குடும்பம் குழந்தை என பிசியாக இருந்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா தனது மகன்களுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு நான் வேலைக்கு செல்லும் முன் என்னுடைய குழந்தைகளுடன் சில நேரம் செலவழித்து விட்டு தான் செல்வேன் என கூறி அழகான புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இது இணையத்தில் தீயாய் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

நயன்தாரா, நயன்தாரா ,nayanthara sons , latest photos ,