தியேட்டருக்கு போய் பாருங்க…. புளு சட்டை மாறனே சொன்ன படம் எது தெரியுமா!

தியேட்டருக்கு போய் பாருங்க…. புளு சட்டை மாறனே சொன்ன படம் எது தெரியுமா!

பிரபல சினிமா விமர்சகரா ப்ளூ சட்டை மாறன் எப்போதும் புது திரைப்படங்கள் வெளியானால் அது குறித்து விமர்சனங்கள் தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். குறிப்பாக இவரிடம் இருந்து ஒரு திரைப்படம் தப்பித்து விட்டால் அந்த திரைப்படம் மாபெரும் வெற்றியாக பார்க்கப்படும்.

ப்ளூ சட்டை மாறன் இடம் இருந்து தப்பித்தாலே போதும் என சினிமாவில் நடிப்பவர்களை நினைப்பார்கள். அந்த அளவுக்கு பிரபலமான சினிமா விமர்சனராக இருந்து வரும் ப்ளூ சட்டை மாறன் பெரும்பாலும் பெருவாரியான திரைப்படங்களை மோசமாக விமர்சித்து…. இதெல்லாம் ஒரு படமா என இழிவாக பேசி தான் நாம் பார்த்திருப்போம்.

ஆனால் தற்போது அவரே ஒரு திரைப்படத்தை தியேட்டருக்கு போய் பாருங்க என கூறி இருக்கிறார். அது என்ன திரைப்படம் என்று கேட்டீர்களானால் பிரசாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் “அந்தகன்” திரைப்படத்தில் பிரியா ஆனந்த் சிம்ரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளிவாக அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆக வெளிவந்திருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
இப்படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் நல்ல விமர்சனம் தந்ததோடு, இந்த வாரம் அந்தகன் பார்க்க தியேட்டருக்கு செல்லலாம் என்று கூறியுள்ளார். இதுவே பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

 

அந்தகன் , ப்ளூ சட்டை மாறன், பிரசாந்த், Actor prasanth , Blue sattai andhagan movie,