இன்னும் எத்தனை நாளைக்கு தான் மறைக்குறது? ரகசிய காதலியை நிச்சயம் செய்தார் நாக சைதன்யா!

இன்னும் எத்தனை நாளைக்கு தான் மறைக்குறது? ரகசிய காதலியை நிச்சயம் செய்தார் நாக சைதன்யா!

நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் ஆவார். இவர் தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

இந்த ஜோடி கடந்த 2021 ஆம் ஆண்டு பிரிந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா அடுத்த திருமணத்திற்கு தயாராகி உள்ளார். கடந்த சில மாதங்களாகவே நாக சைதன்ய மற்றும் சோபிதா துலிபாலா இருவரும் ரகசியமாக காதலித்து டேட்டிங் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா திருமண நிச்சயதார்த்தம் இன்று காலை நடைபெற்றது. இருவருக்கும் நடிகர் நாகர்ஜூனாவின் வீட்டில் வைத்து எளிய முறையில் நிச்சியதார்த்த விழா நடைபெற இருப்பதாக தெரிகிறது. இதில் இருவீட்டாருக்கு நெருக்கமானவர்கள் மட்டும் கலந்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.

நடிகர் நாக சைதன்யா , நடிகை சோபிதா துலிபலா , நாக சைதன்யா நிச்சயதார்த்தம் , naga chaitanya, சமந்தா ,
Akkineni Naga Chaitanya Engagement With Sobhita