34 வயது பாலிவுட் நடிகை பலே பண்ணப்போகும் தனுஷ் – யார் அந்த நடிகை?

34 வயது பாலிவுட் நடிகை பலே பண்ணப்போகும் தனுஷ் – யார் அந்த நடிகை?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளிவந்து சட்டை போடு போட்டு வரும் திரைப்படம் தான் ‘ராயன்’ . இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

இதை அடுத்து தொடர்ச்சியாக தனுஷ் அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்த நிலையில். ஹிந்தியில் Tere Ishk Mein எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.தனுஷ் ஏற்கனவே ராஞ்சனா, அத்ராங்கி ரே உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இந்தி படத்தில் நடிக்கிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் கிருத்தி சனோன் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருத்தி சனோன் , நடிகர் தனுஷ், Actor dhanush , cinema news , Kollywood news