பிரித்தானியாவில் சுமார் 12 மிக முக்கிய நகரங்களில் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. இதனை அடக்க பொலிசார் பாடுபட்டு வருகிறார்கள். என்று அழைக்கப்படும் இனவாத அமைப்பு இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. பின்னர் இது கலவரமாக மாறியுள்ளது. கடைகளை சூறையாடுவது , வாகனங்களை எரிப்பது என்பது போக, பிரித்தானியா வெள்ளை இன ஆங்கிலயர்களுக்கே சொந்தம் என்று இவர்கள் கோஷம் எழுப்புகிறார்கள்.
தமது ஏரியாவில் உள்ள வேற்றின மக்களின் சொத்துகளையும் இவர்கள் நாசம் செய்து வருகிறார்கள். குறிப்பான சில தமிழர்களின் கடைகள் எரிக்கப்பட்டுள்ளது. வூல்-விச் என்னும் இடத்தில் 1 தமிழ் கடை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பெக்கம் என்னும் இடத்தில் மற்றும் ஒரு தமிழ் கடை அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இன் நிலையில் டெஸ்லா கார் உரிமையாளர் எலான் மஸ் அவர்கள், தனது சமூக வலையத் தளத்தில் , பிரிட்டன் கலவரத்தை கேலி செய்யும் வகையில் பதிவுகளை போட்டுள்ளார்.
அதனை பேஸ் புக் நிறுவனம் அகற்றவும் இல்லை. மாறாக அதனை பல மில்லியன் மக்களுக்கு காண்பித்தும் வருகிறது. இது போக, எலான் மஸ்க் போட்டுள்ள பதிவு ஒரு வகையில், கலகக்காரர்களுக்கு ஆதரவாக உள்ளதாக பிரித்தானிய அரசு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. எலான் மஸ்க்கிற்கு தற்போதைய பிரதமரான, கியர் ஸ்டாமரை பிடிக்காது என்பது ஊர் அறிந்த விடையம்.