6 அதி நவீன F16 போர் விமானங்களை நெதர்லாந்து உக்ரைனுக்கு வழங்கியது- இனித் தான் ஆரம்பம் !

6 அதி நவீன F16 போர் விமானங்களை நெதர்லாந்து உக்ரைனுக்கு வழங்கியது- இனித் தான் ஆரம்பம் !

அமெரிக்க தயாரிப்பான F16 ரக அதி நவீன போர் விமானங்களை, நெதர்லாந்து உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. சுமார் 6 விமானங்கள் உக்ரைன் சென்றடைந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இவை மிகவும் ரகசியமான இடம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டு விமானிகளுக்கு , F16 விமானத்தை எப்படிச் செலுத்துவது என்பது தொடர்பாக, அமெரிக்க விமானிகள் பயிற்ச்சிகளைக் கொடுக்க உள்ளதாகவும் தவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கையில் பாரிய ஆயுதங்கள் எதுவும் இன்றி, இன்றுவரை ரஷ்யாவோடு கடுமையாக சண்டையிட்டு வருகிறது உக்ரைன். குதிரைக்கு கொம்பு முளைத்தது போல தற்போது F16 போர் விமானங்கள் கிடைத்துள்ளது. இதனை ரஷ்யாவால் சுட்டு வீழ்த்த முடியாது. காரணம் தரையில் இருந்து ஏவப்படும் எந்த ஒரு ஏவுகணையையும் , F16 விமானம் தடுமாற வைத்து , வேறு இடத்தில் அதனை வெடிக்க வைத்து விடும். எனவே உக்ரைன் இனி F16ஐ பாவித்து, ரஷ்யாவுக்குள் சென்றும் தாக்குதல் நடத்த முடியும்.

வானில் F16 பறக்கும் வேளை, அதனை ரஷ்யாவின் SU விமானங்கள் லாக் செய்து ஏவுகணையை ஏவுவது என்பது மிகக் கடினமான விடையமாகவே உள்ளது.