கணக்கெடுப்பில் ஜோ பைடனை விட சுமார் 2.75 பாயிண்டுகளால் ரம் முன் நிலை வகித்து வந்தார். ஆனால் ஜோ பைடன் விலகி கமலா ஹரிஸ் வேட்ப்பாளர் ஆன நிலையில், இன்று கமலா ஹரிஸ் 3 பாயிண்டுகள் எகிறி, ரம்பை பின் தள்ளியுள்ளதாக அமெரிக்க புள்ளி விபரங்கள் சற்று முன்னர் அறிவித்துள்ளார்கள். கமலா ஹரிசுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
நவம்பர் மாதம் 5ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில். முதலில் ரம்பை எதிர்த்து ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் அவர் வாபாஸ் பெற்ற நிலையில், துணை ஜனாதிபதியாக உள்ள கமலா ஹரிஸ் ஜனாதிபதி வேட்ப்பாளராக அறிவிக்கப்பட்டார். அன்று முதல் இன்றுவரை, கமலா ஹரிஸுக்கு ஆதரவு கட்டம் கட்டமாகப் பெருகி வருகிறது.
அமெரிக்காவில் வாழும் ஆபிரிக்க இன மக்கள், இந்தியர்கள், லத்தீன் அமெரிக்கர்கள் என்று பல தரப்பட்ட மக்களும் கமலா ஹரிசை ஆதரிக்க ஆரம்பித்துள்ள நிலையில். அவர் தேர்தலில் வெற்றியடைய பெரும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. பெரும் வெற்றி என்று சொல்ல முடியாது. இருப்பினும் ரம்பை வீழ்த்தும் அளவுக்கு அவருக்கு வாக்குகள் விழும் என்று ஊடகங்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே அவருக்கு ஒரு அமெரிக்க ஜனாதிபதிக்கு கொடுக்கப்படும் அதி உச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்க பாதுகாப்புச் சேவை இந்த அளவுக்கு அவருக்கு பாதுகாப்பு கொடுக்கிறது என்றால் அதன் பின்னால் பல விடையங்கள் மறைந்து இருக்கும் என்பது உறுதி.